நெல்லை மாநகராட்சி நகர் நல அலுவலராகப் பணியாற்றும் சரோஜா, உடல் நலக்குறைவு காரணமாக ஜனவரி முதல் மார்ச் வரை விடுப்பில் சென்றிருந்தார். அப்போது பொறுப்பு அதிகாரியாக செயல்பட்ட பெண் அதிகாரி சுகாதாரப் பணிகளுக்காக சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர், பினாயில் கொள்முதல் செய்துள்ளார். அதில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.நெல்லை மாநகராட்சி அலுவலகம்
கடந்த மார்ச் மாதம் பினாயில் வாங்கியதற்காக 55 லட்சம் ரூபாய் பில் வந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் பணியில் சேர்ந்த சரோஜா அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ஒரு மாதத்துக்கான பினாயில் வாங்கியதற்கு அதிகமான தொகை போடப்பட்டதைக் கண்ட அவர், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து இந்த முறைகேடு குறித்து தணிக்கை செய்ய அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்த பின்னர் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. பொறுப்பு மேயரான கே.ஆர்.ராஜூ தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் மேயர் சரவணனைத் தவிர பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி கூட்டம்
கடந்த ஐந்து மாதங்களாக மாநகராட்சிக் கூட்டத்தை நடத்துவதில் சிக்கல் நிலவிய நிலையில் இந்தக் கூட்டம் சுமுகமாக நடைபெற்றது. கவுன்சிலர்கள் பலரும் ஆர்வத்துடன் தங்களது வார்டு குறைகளை எடுத்துச் சொல்லி அவற்றுகான தீர்வு கிடைக்கக் கோரினார்கள். ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் அவற்றுக்கு பொறுப்புடன் பதில் அளித்தனர். கூட்டத்தில் 193 தீர்மானங்கள் வைக்கப்பட்டதில் அவற்றின் மீது விவாதம் நடத்தப்பட்டு ஒரு தீர்மானத்தைத் தவிர அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் சிலர், மாநகராட்சியில் பினாயில் கொள்முதல் செய்ததில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். மாநகராட்சிக்கு 55கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்கள்.தீர்மானங்கள் குறித்த விவாதம்
அதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ``மாமன்றக் கூட்டத்தின் அனுமதி இல்லாமல் ஆணையர் ஒப்புதலுடன் கொள்முதல் செய்ய முடியும். ஆனாலும் இந்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அப்போது பொறுப்பு அலுவலராக இருந்த பெண் அதிகாரி மீது துறைரீதியாக 17 ஏ பிரிவில் கீழ் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
நெல்லை மாவட்ட தி.மு.க-வில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக நீண்ட காலமாக நெல்லை மாநகராட்சி கூட்டங்களை நடத்த இயலவில்லை. தற்போது கட்சித் தலைமை தலையிட்டு மேயர் ராஜினாமா செய்துவிட்டதால் சுமுக நிலை திரும்பியுள்ளதாக கவுன்சிலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T9fKV5
Tuesday, 16 July 2024
Home »
» நெல்லை: ரூ.55 லட்சம் பினாயில் முறைகேடு - விடுப்பில் சென்ற அதிகாரி; பொறுப்பு அதிகாரி கொடுத்த ஷாக்!