`திருவள்ளூர் மாவட்டம், பொத்துரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்துகொள்ளலாம்!' - நீதிமன்றம்
``திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகிலுள்ள பொத்துரில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில, அவரின் உடலை அடக்கம் செய்துகொள்ளலாம். அதேபோல பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக இடத்தில், அரசு அனுமதியுடன் நினைவு மண்டபம் கட்டிக் கொள்ளலாம். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை." - ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனுவின் விசாரணையில், நீதிபதி பவானி சுப்பராயன்!ஆம்ஸ்ட்ராங்: மாயாவதி, திருமா `டு' பா.ரஞ்சித், வெற்றிமாறன்.. அஞ்சலி செலுத்திய தலைவர்கள் & தொண்டர்கள்!
`பட்டியலின தலைவர்களுக்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.' - திருமாவளவன்
`ஆம்ஸ்டராங் கொலை சகித்துகொள்ள முடியாதது. இது ஒரு கோழைத்தனம். பட்டப்பகலில், ஒரு கட்சியின் தலைவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தேசியக் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். 17 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சிகாக சேவையாற்றியிருறார். மாயாவதியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். சமூக நல்லிணக்கத்துக்கு முக்கியதுவம் கொடுத்தவர். பௌத்தம் தான் மாற்று அரசியல் வழி என்பதை வலியுறுத்தியவர். இவருடைய இழப்பு தலித் அரசியலுக்கு பெரும் இழப்பு. தொடர்பே இல்லாத ஒரு வழக்கில் தொடர்புபடுத்தி, தற்போது அவரை கொலை செய்திருக்கிறார்கள். இன்னும் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற தலித் தலைவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவது கவலையளிக்கிறது. தமிழ்நாடு அரசு உண்மையான குற்றவாளிகளை, கூலிப்படை தலைவர்களை, அவர்களை இயக்கியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். ஆம்ஸ்டராங் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. பட்டியலின தலைவர்களுக்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.' - திருமாவளவன்
``உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை விரைந்து தமிழ்நாடு அரசு கண்டுபிடிக்க வேண்டும். இந்த வழக்கில் உடனடியாக சிபிஐ விசாரணை வேண்டும். மிகுந்த அர்ப்பணிப்புடன் தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியை வளர்த்தவர். எனவே தமிழ்நாடு அரசு எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம். பட்டியலின மக்களுக்கு தமிழ்நாடு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆம்ஸ்டராங் குடும்பத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும்." - மாயாவதி
Armstrong: `ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கைதாகவில்லை!' - மாயாவதி
``தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. ஆம்ஸ்டராங் கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை, அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்திருக்கலாம்." - மாயாவதி
`புத்தர் காட்டிய வழியில் வாழ்ந்தவர் ஆம்ஸ்ட்ராங்!' - மாயாவதி
``ஆம்ஸ்டராங் மறைவு செய்தி கேட்டு, மிகுந்த மன வேதனை அடைந்தேன். புத்தர் காட்டிய மனிதாபிமான வழியில் வாழ்ந்தவர் ஆம்ஸ்டராங்!" - மாயாவதி
ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்த மாயாவதி!
Armstrong: ஆம்ஸ்ட்ராங் - மாயாவதி
பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் இருக்கும் ஆம்ஸ்டராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தவர், தற்போது தொண்டர்களிடையே உரையாற்றி வருகிறார்!
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி!
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்படுவது எங்கே? - நீதிமன்றத்தில் வாதம்!
ஆம்ஸ்ட்ராங் உடல், செம்பியம் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று 9 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம்ஸ்டிராங்கை அடக்கம் செய்ய வேறு நல்ல இடத்தை கூறுங்கள் என வழக்கு விசாரணையை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி பவானி சுப்பராயன், 12 மணிக்கு பதிலளிப்பதாக ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பு முறையீடு செய்தது. இதற்கிடையில், `கட்சி அலுவலகம் குடியிருப்பு நிறைந்த பகுதி. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம்' என அரசுத் தரப்பு வாதம் செய்தது.
Armstrong: ஆம்ஸ்ட்ராங் - உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்!
Armstrong: ஆம்ஸ்ட்ராங் - உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்!
ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக் கோரி மனு; 9 மணிக்கு விசாரிக்கும் நீதிபதி!
சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல், செம்பியம் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று 9 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
Armstrong: ஆம்ஸ்ட்ராங் - நேற்றைய தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த அரசியல் தலைவர்கள்!
Armstrong: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி; இன்று சென்னை வருகிறார் மாயாவதி! | Live
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பெரம்பூரில் பைக்கில் வந்த மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டார். பின்னர் உடனடியாக மீட்கப்பட்ட அவர், கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அதைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து, நேற்றைய தினம் அவருடைய உறவினர்களிடம் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஒப்படைக்கப்பட்டது.ஆம்ஸ்ட்ராங்க் கொலை
அதையடுத்து, அவருடைய அயனாவரம் இல்லத்தில் நேற்றைய தினம் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னைக்கு வருகிறார். பெரம்பூரில் போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppb`ஆம்ஸ்ட்ராங் கொலையில் யாரும் சரணடையவில்லை; போலீஸார்தான் கைதுசெய்தனர்.!' - காவல் ஆணையர்
http://dlvr.it/T9GbhP
Sunday 7 July 2024
Home »
» Armstrong: `திருவள்ளூர் மாவட்டம், பொத்துரில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்துகொள்ளலாம்!' - நீதிமன்றம் | Live Updates