வேலூர், காட்பாடியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் கடந்த 11-ம் தேதி காலமானதைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேகர் ரெட்டியின் வீட்டுக்கே சென்று உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். சேகர் ரெட்டிக்கும் ஆறுதல் கூறினார். முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் `ஜனநாயக’ முறைப்படி நடைபெறவில்லை. அதனால், அ.தி.மு.க போட்டியிடவில்லை. சேகர்ரெட்டி வீட்டில் எடப்பாடி பழனிசாமி
அதிகாரப் பலம், பண பலத்தினால்தான் தி.மு.க வெற்றிப் பெற்றிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்குத்தான் அதிகமான வாக்குகள் பதிவாகின.
காவிரி விவகாரத்தில், `ஒவ்வொரு ஆண்டும், கர்நாடக அணையில் இருந்து குறிப்பிட்ட அளவுக்குத் தண்ணீர் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஆனால், அதைப்பற்றியெல்லாம் `இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க பேசுவது கிடையாது. தமிழ்நாடு விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத அரசாங்கம். தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் கவலைப்படாத ஓர் அரசாங்கம். அவர்களுக்குக் கூட்டணிதான் முக்கியம். அதிகாரம்தான் முக்கியம். இந்த `விடியா’ தி.மு.க முதலமைச்சர் எந்தக் குரலையுமே கொடுப்பதில்லை. எடப்பாடி பழனிசாமி
இன்று சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடம் என்பவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர். மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தைக் கைப்பற்றுவதற்காக அதிகாலையில் அவரை வேக வேகமாக அழைத்துச் சென்றது ஏன்?. கைவிலங்குப் போட்டு பாதுகாப்போடு சென்றிருக்க வேண்டும். ஏற்கெனவே, `உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை’ என்று ஆம்ஸ்ட்ராங் உறவினர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் சொல்லி வந்த நிலையில், இந்த என்கவுன்ட்டர் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது’’ என்றார்.`செங்கல்பட்டு கள்ளச்சாராய பலி; 14 மாதங்களுக்குப் பிறகே வழக்கு அறிக்கை தாக்கல்!'- கவர்னர் ரவி காட்டம்
http://dlvr.it/T9Z4cr
Sunday 14 July 2024
Home »
» `திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம்; அதிகாலையில் அழைத்துச் சென்றது ஏன்..?’ - எடப்பாடி பழனிசாமி