குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்திநகர் காவல் துறையில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்தப் புகாரில், சமீர் ராய் என்பவர் தன்னிடம் தன் பெயரையும், செல்போன் எண்ணையும், முகவரியையும் கேட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் காந்திநகர் காவல்துறை சமீர் ராய் மீது கடந்த ஏப்ரல் 26 அன்று ஐ.பி.சி சட்டத்தின் பிரிவு 354-A கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. மேலும், சமீர் ராயை கைது செய்து சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்து சமீர் ராய் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.காவல்துறை
அந்த வழக்கு, நீதிபதி நிர்சார் தேசாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சமீர் ராய் தரப்பில் ஆஜரான வக்கீல், ``காவல்துறை அதிகாரிகள் பெண்ணிடம் செல்போன் எண்ணை கேட்டதற்காக பாலியல் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். மேலும், சமீரின் செல்போனை பிடிங்கி சில தகவல்களையும் அழித்திருக்கின்றனர். இது தொடர்பாக கேள்வி கேட்டதால் சமீர் ராயையும் கடுமையாக தாக்கியிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்சார் தேசாய், ``யாராவது உங்கள் செல்போன் எண் என்ன எனக் கேட்டால் அது உங்களைப் புண்படுத்தலாமே தவிர, அதற்காக எஃப்.ஐ.ஆர் போடும் அளவிற்கான குற்றமல்ல அது. நிச்சயமாக, இது அந்த இளைஞரின் பொருத்தமற்ற செயல், ஆனால் ஐ.பி.சி-யின் பிரிவு 354-ன் படி பார்த்தால், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் வழக்கு தொடரும் அளவிற்கான குற்றமாகாது. எஃப்.ஐ.ஆர் உண்மை என்று நம்பப்பட்டாலும், அறியாத பெண் ஒருவரிடம் பெயர், முகவரி போன்றவற்றைக் கேட்பது பொருத்தமற்ற செயல். அது பாலியல் துன்புறுத்தலாகாது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
http://dlvr.it/T9j9SM
Wednesday 17 July 2024
Home »
» ``பெண்ணிடம் செல்போன் எண் கேட்பது பாலியல் குற்றமாகாது..." - குஜராத் உயர் நீதிமன்றம் கருத்து!