கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் குரூப் சி, டி கிரேடு வேலைகளில் கன்னடர்களுக்கு 100 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு மசோதா கொண்டுவந்திருப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்திருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இதற்கெதிராக தொழில் நிறுவனங்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அமைச்சர்கள் இது குறித்து விளக்கமளித்துவருகின்றனர்.சித்தராமையா
முன்னதாக, சித்தராமையா இது தொடர்பாக நேற்று தனது X சமூக வலைதளப் பக்கத்தில், `மாநிலத்திலுள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு 100 சதவிகித கன்னடர்களை ஆள்சேர்ப்பு செய்வதைக் கட்டாயமாக்கும் மசோதாவுக்குத் திங்களன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அரசு கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்களின் முன்னுரிமை' என்று ட்வீட் செய்திருந்தார்.தொழில்நிறுவனங்களின் எதிர்ப்புகள்!
சித்தராமையாவின் இந்த அறிவிப்புக்கு தொழில் நிறுவனங்கள் மத்தியில் ஆதரவைக் காட்டிலும் எதிர்ப்புகள் அதிகம் கிளம்பியது. அந்த வரிசையில், மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் சேர்மேன் (Chairman of Manipal Global Education Services) மோகன்தாஸ் பாய், `இந்த மசோதா பாரபட்சமானது மற்றும் பிற்போக்குத்தனமானது. இது 'அனிமல் ஃபார்ம் (Animal Farm)' (ஜார்ஜ் ஆர்வெல் நாவல்) போன்ற ஒரு பாசிச மசோதா' என்று ட்வீட் செய்து விமர்சித்தார்.கிரண் மஜும்தார்-ஷா, மோகன்தாஸ் பாய்
அதேபோல், பயோகான் (Biocon) நிர்வாகத் தலைவர் கிரண் மஜும்தார்-ஷா, ``தொழில்நுட்ப மையமாக எங்களுக்குத் திறமையானவர்கள் தேவை, அதே நேரத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த நடவடிக்கை, தொழில்நுட்பத்தில் நமது மாநிலத்தின் முன்னணி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. இதில் எச்சரிக்கை வேண்டும்' என்று தெரிவித்தார்.ஆர்.கே.மிஸ்ரா - ASSOCHAM
மேலும், அசோசெம் (ASSOCHAM) நிறுவனத்தின் கர்நாடக பிரிவு இணைத் தலைவர் ஆர்.கே.மிஸ்ரா, ``கர்நாடக அரசின் மற்றுமொரு அதிமேதாவித்தன மசோதா. உள்ளூர்வாசிகளுக்கு இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்குவதுடன், அதைக் கண்காணிக்க ஒவ்வொரு நிறுவனத்திலும் அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும். இந்தக் குறுகிய பார்வை நிறுவனங்களை அச்சுறுத்தக்கூடும்" என்று எச்சரித்திருக்கிறார். இவற்றுக்கு மத்தியில், முதல்வர் சித்தராமையா தன்னுடைய X சமூக வலைதளப் பதிவை நீக்கிவிட்டார்.அமைச்சர்களின் விளக்கங்கள்!
இந்தக் குழப்பங்களுக்கு விளக்கமளித்த மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, ``இதில் பதட்டப்படவேண்டிய அவசியமில்லை. உள்ளூர்வாசிகளுக்கு வேலைகளை வழங்குவதும் அதே நேரத்தில் முதலீடுகளைக் கொண்டுவருவதும் மாநில அரசின் நோக்கமாகும். இந்த மசோதா தொழிலாளர் துறையின் பரிந்துரை. தொழில்துறை அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இதில் எந்த விவாதமும் இல்லை.சந்தோஷ் லாட், பிரியங்க் கார்கே
அதனால், எங்கள் துறைசார்ந்த தலைவர்களுடன் விரிவான ஆலோசனையை நடத்துமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதன்பிறகு, உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்குவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதைப் பார்க்க ஒரு பொதுவான நிலைக்கு வருவோம்" என்றார்.
இவரைத்தொடர்ந்து, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், தனியார் நிறுவனங்களின் நிர்வாகப் பதவிகளில் 50 சதவிகிதமும், நிர்வாகம் சாராத பதவிகளில் 70 சதவிகிதமும் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
அதேபோல், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், ``பலருக்கு அச்சங்கள் இருப்பதை நான் கவனித்தேன். இந்த குழப்பத்தை நாங்கள் தீர்ப்போம். இதனால் எந்த பாதகமான விளைவும் ஏற்படாது. இந்தியா ஒரு உற்பத்தி மற்றும் தொழில்துறை புரட்சியைச் சந்தித்து வருகிறது. இந்தப் போட்டி யுகத்தில், கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்கள் சிறந்த நிலையில் இருக்க முயற்சி செய்கின்றன.எம்.பி.பாட்டீல்
அனைத்து மாநிலங்களும் போட்டியின் உச்சத்தில் இருப்பது மிகவும் முக்கியமானது. நூற்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் தொழில்மயமாதல் போட்டியைக் கர்நாடகா இழக்க முடியாது" என்றார்.
`கர்நாடகா மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் வேட்பாளர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா, 2024' நாளை (ஜூலை 18) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது.கதவை மூடும் தனியார் பால் நிறுவனங்கள்... கலக்கத்தில் பால் விவசாயிகள்!
http://dlvr.it/T9jdDF
Wednesday, 17 July 2024
Home »
» கர்நாடகா: தனியாரில் குரூப் C, D வேலைகள் 100% கன்னடர்களுக்கா? - கிளம்பிய எதிர்ப்பும், விளக்கமும்!