அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் அதிஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். கொலை முயற்சியில் ஈடுபட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞர் அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump)
இது தொடர்பாக குடியரசுக் கட்சி,`டொனால்ட் ட்ரம்புக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் மெத்தனம் காட்டுகிறது' எனக் குற்றம்சாட்டியது. ஆனால் அமெரிக்க அரசு, ``ட்ரம்ப்பின் உயிருக்கு ஈரானால் அச்சுறுத்தல் இருப்பது குறித்து அமெரிக்க ரகசிய அமைப்பு தகவலளித்தது. அதனடிப்படையில், ட்ரம்ப்புக்கு எதிர் தாக்குதல் நடத்தும் பாதுகாப்பு பணியாளர்கள், ட்ரோன் கண்காணிப்பு, ரோபோ நாய்கள் ஆகியவை மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய அச்சுறுத்தல் தகவல்களால், தேவையான ஆதாரங்களை திரட்டி தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில்தான், டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிஃப் மெர்ச்சண்ட் என்பவரை அமெரிக்க ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) அமைப்பு கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக எஃப்.பி.ஐ தலைவர் கிறிஸ்டோபர் வ்ரே, ``குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல உளவுத் திரில்லர் திரைப்படத்தைப் போன்ற விரிவான சதித்திட்டத்தில் ஒருவர் ஈடுபட்டிருக்கிறார்.ஆசிஃப் மெர்ச்சண்ட்
தற்போது அம்பலப்படுத்தப்பட்ட இந்த கொலை சதி, ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஒரு பாகிஸ்தானியரால் திட்டமிடப்பட்டது. 2020-ம் ஆண்டு ஈராக்கில், ஈரான் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்ய, அப்போதைய அதிபராக இருந்த ட்ரம்ப் உத்தரவிட்டதிலிருந்து, அமெரிக்கவின் அதிகாரிகளை கொன்று பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரான் திட்டமிட்டு வருகிறது. ஈரானின் இந்த இடைவிடாத முயற்சிகளை தீவிர நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் நடந்த கொலை முயற்சிக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை." எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Yahya Sinwar: இஸ்மாயில் ஹனியே மரணம்; ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் தேர்வு!
http://dlvr.it/TBcGVV
Wednesday, 7 August 2024
Home »
» ட்ரம்பை கொல்ல சதி: ``த்ரில்லர் படம் போல விரிவான சதித்திட்டம்..!" - பாகிஸ்தானைச் சேர்ந்தவர் கைது