இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினம் நாடெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொடியேற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சிறந்த பஞ்சாயத்து, நகராட்சி, தேர்வுநிலை பேரூராட்சி, மாநகராட்சி என தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி சிறப்பிக்கபட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின் 2வது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் சென்னை சென்றுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கொடி கம்பத்தில் சுதந்திர தின நாளில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து தூத்துக்குடி பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டன அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கொடிக்கம்பம்
அதில், “சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம்பிள்ளை, கட்டபொம்மன், வீரன் அழகுமுத்து கோன், வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம் உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட தலைவர்கள் பிறந்த மாவட்டம் தூத்துக்குடி. இந்த மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. மேயர், துணை மேயர் வெளியூர் சென்ற நிலையில் தாங்கள் இல்லாமல் கொடி ஏற்றக்கூடாது என கட்டளையிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் தூத்துக்குடியில் இருந்த போதிலும் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை.
மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்ட பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் என மாநகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் கொடி ஏற்றப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய பகுதிகளில் இவ்வாறு சுதந்திரதினவிழாவை புறக்கணிப்பது கண்டனத்திற்குரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பேசினோம், “மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பிராமாண்ட கொடிக் கம்பம்
ஆனால், கொடியேற்றுவதற்கான மோட்டார் பொருத்தும் பணி இன்னும் நிறைவடையவில்லை. அதனால், அந்த கம்பத்தில் கொடி ஏற்றப்படவில்லை. அதே நேரத்தில் மாநகராட்சி அலுவலக கட்டிட மேற்பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல அலுவலகங்களிலும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளனர். முழு காரணம் தெரியாமல் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TByRRx
Thursday, 15 August 2024
Home »
» சுதந்திர தினம்: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்றப்படாத தேசியக் கொடி - கண்டித்த பாஜக