அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ``அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறது" எனக் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக செபி விசாரித்து வந்த நிலையில், செபியின் விசாரணை நேர்மையாக இல்லை என உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பும் வெளியானது.அதானி - Adani
அதில், `` செபியின் அதிகார வரம்பில் ஓரளவுக்கு மேல் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. தவிர, ஒரு வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற வலுவான நியாயங்கள் தேவை. அந்த வகையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றுவதற்கு எந்தமுகாந்திரமும் இல்லை. இந்தவழக்கை செபியே தொடர்ந்து விசாரிக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில்தான், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவருடைய கணவர் ஆகியோர், அதானி நிறுவனத்துக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் பங்குகள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.
இதை மாதபி பூரி புச்சும், அவருடைய கணவரும் மறுத்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை. அதானி குழுமத்துக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். SEBI தலைவர் மதாபி பூரி புச்
பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்களை கொண்டு, உண்மைகளையும் சட்டத்தையும் அலட்சியம் செய்து, தனிப்பட்ட லாபம் ஈட்டுவதற்காக இது போன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கெனவே ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எங்களின் வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படையானது. அதானி குழுமத்துக்கு தனிநபர்களுடன் வணிக உறவுகள் எதுவும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Hindenburg Report: `அடிப்படை ஆதரமற்றவை...' - ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டும், SEBI தலைவர் மறுப்பும்!
http://dlvr.it/TBn9YS
Sunday, 11 August 2024
Home »
» Hindenburg Report: `தனிப்பட்ட லாபத்துக்காகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு!' - அதானி குழுமம்