முதல்வர் ஸ்டாலின் வழங்கிய விருதுகள் விவரம்
நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கிடைக்க செய்தவரான முனைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
அறிவியல், கலை, மாணவர் நலன் ஆகிய துறையில் சீரிய பங்களிப்புக்காக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, சந்திரயான் -3 மிஷனின் திட்ட இயக்குனர் முனைவர் ப.வீரமுத்து வேலுக்கு வழங்கப்பட்டது.
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, வயநாடு நிலச்சரிவு பகுதிகளில் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிய செவிலியர் அ.சபீனாவுக்கு வழங்கப்பட்டது.
கலைஞர் உதவி தொகை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் தகுதிமிக்கவர்களை தேர்வு செய்த, தலைமை தொழிற்நுட்ப அலுவலர் த.வனிதாவுக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
``தமிழ்நாட்டு மக்கள் தொடந்து அளித்து வரும் வெற்றிக்கு தலை வணங்குகிறேன்” - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், 6,64,180 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், 14,54,712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 12,35,945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். இறையூரில் தொழிற் பூங்கா, திருச்சி, மதுரையில் புதிய டைட்டில் பூங்கா, விழுப்புரம், திருப்பூர்,வேலூர், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் மினி டைட்டில் பூங்கா, பரந்தூரில் விமான நிலையம் என திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
இன்று சில திட்டங்களை அறிவிப்பதில் மகிழ்கிறேன். முதல்வர் மருந்தகம், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் தொழில் தொடங்க முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம், தியாகிகள் ஓய்வூதியம் ரூ,1000 உயர்த்தி ரூ.21,000-மாக வழங்கப்படும். தியாகிகளின் குடும்ப ஓய்வூதியத்தில் ரூ.500 உயர்த்தி ரூ.11,500 வழங்கப்படும். இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதியை ஆய்வு செய்ய பல்துறை அறிஞர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும். இந்த குழு எதிர்காலத்தில் ஆபத்துகளை குறைக்க அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழவேண்டும் என்பதற்காக என்னை நான் ஒப்புக் கொடுத்திருக்கிறேன். மக்களுக்கு உண்மையாக இருப்பதே மக்கள் தொண்டு என செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடந்து அளித்து வரும் வெற்றிக்கு தலை வணங்குகிறேன்.” என்றார்.
`உங்கள் குடும்பங்களில் ஒருவனாக..!’ - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி பல்துறை வளர்ச்சியாக இருந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள், விடியல் பயணம் திட்டம், புதுமை பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கல்வி வளர்ச்சி திட்டங்களில், இந்தியாவின் முன்னோடி திட்டமான முதல்வரின் காலை உணவுத் திட்டம். இந்த திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. இதுபோன்ற திட்டங்களால் நமது மாநிலம் உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது என ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன.
மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் கப்போம், நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். உலகளவில் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் எனபதுதான் என் கனவு. ஒன்றிய அரசின் தரவுகளின் படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 77,79,000 வேலை வாய்ப்புகள் உங்கள் திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தேர்வு வாரியங்கள் மூலம் 32,774 பேருக்கும், அரசு அமைப்புகளில், 32,709 பேருக்கும் அரசு பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. 2026 ஜனவரி மாதத்துக்குள் 75,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்றார்.
"வளர்ச்சி என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல..!" - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``திராவிட மாடல் என்றால் என்ன எனக் கேட்பவர்களுக்கு பல முறை பதிலளித்திருந்தாலும், இங்கு மீண்டும் அதை நினவு படுத்துகிறேன். சமூக நிதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியலின் அடித்தளத்தில் இருக்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். பொருளாதாரத்தில் மட்டும் வளர்ச்சி என்பது அல்ல. அது சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், சமூகம், கல்வி, சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்திலும் இருப்பதுதான் உண்மையான வளர்ச்சி. அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி.” என்றார்.
``இந்த வாய்ப்பை எனக்கு தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்றென்றும் நன்றிக்குறியவனாவேன்" - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் ``மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டும் என நடந்த போராட்டம். இந்த உரிமையை பெற்றுதந்ததால்தான் நானும் 4-வது ஆண்டாக சென்னை கோட்டையில் கோடி ஏற்றி பெருமை அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்றென்றும் நன்றிக்குறியவனாவேன். விடுதலைக்காக, உடமை, உடல் உறுப்புகள், குடும்பம், சொத்து, உயிர் என அனைத்தையும் இழந்த விடுதலை வீரர்களுக்கு, அவர்கள் வாழ்ந்த பகுதியில் சிலை, மணிமண்டபம், நினைவு சின்னங்கள் அமைத்து போற்றி வருகிறோம். 2021-ல் எனது தலைமையில் அமைந்திருக்கும் உங்கள் திராவிட மாடல் ஆட்சியில், கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனாருக்கும், அஞ்சலை அம்மாளுக்கும், நாமக்கல் கவிஞருக்கும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
திவான் பகதூர் திராவிட மணி ரெட்டை மாலை சீனிவாசனுக்கு மணி மண்டபம், வீரர் சுந்தர லிங்கம் அவர்களுக்கு சிலை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு இரண்டு மண்டபம், இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவ சிலை, மணி மண்டபம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குயிலி, திருப்பூர் குமரன், தியாகி அம்பலம் அம்பல் ஆகியோருக்கான மணி மண்டபம், திருவுருவ சிலை நிறுவும் பணிகள் நடந்து வருகிறது. இந்த தியாகிகளின் கனவையும் நிறைவேற்றி வருக்கியது நமது திராவிட மாடல் அரசு.” என்றார்,
``இதுவும் மாநில உரிமைக்கான போராட்டம்தான்..!" - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``விடுதலை நாள் என்பது அரசியல் விடுதலை நாள் என்பது மட்டுமல்ல. பண்பாட்டு விழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள்மட்டுமல்ல. ஆனந்தமான இந்தியாவை அடுத்தடுத்த ஆண்டுகளில் உருவாக்க திட்டமிடும் நாள். விடுதலை நாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலில் 1974-ம் ஆண்டு பெற்று தந்தவர் நமது முன்னாள் முதல்வர் கலைஞர். இதுவும் ஒரு விடுதலைப் போராட்டம் தான். மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டும் என நடந்த போராட்டம்.” என்றார்,
``ஒருவண்ணமல்ல நமது தேசிய கொடி” - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``வெளிநாடுகளின் உதவியையும் பெற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை நடத்தியபோது, அவருடன் கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள். விடுதலை அடைய கால நிர்ணயம் இல்லை எனத் தெரிந்தும், உயிரையும் இழந்தவர்கள் வாழ்ந்த மண் இந்த தமிழ் மண். அறவழியில் எதிரியை பணியவைத்த காந்தியடிகள் பின்னால் முழு மனதுடன் இந்தியா அணி வகுந்தது. அதில் தமிழ்நாடு முழுமையாக கைகோர்த்து நின்றது. முதல்வர் ஸ்டாலின்
சத்தியப் பாதையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், அதற்காக அணிவகுத்து நின்றவர்கள் தமிழ்நாட்டின் தியாகிகள். இவர்களின் தியாகத்தால்தான் விடுதலை காற்றை சுவைத்தோம். நமக்கான நாடு நமதே என்பதை உணர்ந்தோம். 77 ஆண்டுகளை கடந்துவிட்டது விடுதலை இந்தியா. தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி வளர்த்து வருகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை, ஒருமைபாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றின் ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வலிமையாக உலகுக்கு காட்டி வருகிறோம். ஒருவண்ணமல்ல நமது தேசிய கொடி. அது மூவண்ணக் கொடி. நமது பன்முகத் தன்மையின் அடையாளம் இந்த கொடி.” என்றார்.
'தாயின் மணிக்கொடிப் பாரீர்..." - தேசியக் கொடியை ஏற்றி உரையை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிவைத்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``தாயின் மணிக்கொடிப் பாரீர் என்ற பாடலை பாடும் தகுதியை தந்த இந்திய விடுதலை வீரர்களை வணங்கி உரையை தொடர்கிறேன். நாட்டு மக்களுக்கு விடுதலை நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விடுதலை பெற்று தந்த வீரர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் போற்றுவோம். அவர்கள் எந்த நோக்கத்துக்காக போராடி சுதந்திரம் பெற்று தந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேற இந்த நாளில் உறுதிஏற்போம். இந்த விடுதலை 300 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு கிடைத்தது." என்றார்.
ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
இந்திய தேசத்தின் 78-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி உரையாற்றுகிறார். முதல்வர் ஸ்டாலின் தேசியக்கோடி ஏற்றியதும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது.
சென்னை சுதந்திரதின விழா! நேரலை
கோட்டைக் கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை
இந்தியாவில் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4-வது ஆண்டாக தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். கோட்டைக் கொத்தளத்துக்கு வரும்முன் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் முதல்வர், காலை 8 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றுகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TBx72K
Thursday, 15 August 2024
Home »
» Live சுதந்திர தினம்: "மேலும் 75,000 பேருக்கு அரசு வேலை டு முதல்வர் மருந்தகம்" - முதல்வர் ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்