சென்னை, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானா. இவர் கொடுங்கையூரிலுள்ள கிருஷ்ண மூர்த்தி நகர்ப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பியிருக்கிறார் என்பது அப்பகுதி மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இதுகுறித்து பகுதிவாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றிருக்கிறார்கள். அப்போது தன்னுடைய ஆதரவாளர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த அசன் மௌலானா, அனைவரையும் விரட்டியடித்திருக்கிறார்.அப்பாவு
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து 11.8.2024 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் "பொதுப்பாதையை ஆக்கிரமித்த எம்.எல்.ஏ, மீட்கச் சென்றவர்களைத் தாக்கினார்!"- கதறும் கொடுங்கையூர் மக்கள்! என்கிற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதியிருந்தோம். இந்த சூழலில் எம்.எல்.ஏ அசன் மௌலானாவை சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்த்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கொடுங்கையூர் பகுதி பக்கம் சபாநாயர் அப்பாவுவிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.“பொதுப்பாதையை ஆக்கிரமித்த எம்.எல்.ஏ, மீட்கச் சென்றவர்களைத் தாக்கினார்!”- கதறும் கொடுங்கையூர் மக்கள்!
இதுகுறித்து தலைநகர் சென்னை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு கொடுத்துள்ள கடிதத்தில், "பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணமூர்த்தி நகரில் ராமகிருஷ்ணன் தெரு, சன்னதி தெரு இருக்கிறது. இதற்கு இடையில் இருக்கும் கணபதி தெருவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை காங்கிரஸ் கட்சி கொறடாவும், வேளச்சேரி எம்.எல்.ஏ-வுமான அசன் மெளலானா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். 1971-ம் ஆண்டு இப்பகுதியில் மனைப்பிரிவு உருவாக்கப்பட்ட காலத்திலேயே வரைப்படத்தில் கணபதி தெரு உள்ளது.மக்கள் அளித்துள்ள புகார் கடிதம்
1994-ம் ஆண்டில் தான் அசன் மௌலானா குடும்பத்தினர் இத்தெருவுக்கு அருகிலுள்ள இடத்தை வாங்கியுள்ளனர். கணபதி தெருவின் இருபக்கங்களிலும் இவர்களின் மனைகள் உள்ளதால் கணபதி தெருவை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர். இதனைக் கண்டித்து பகுதி மக்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சட்டப் போராட்டம் நடத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை காட்டி அசன் மௌலானா குடும்பத்தினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தீர்ப்பு பெற்றுள்ளனர். 2023-ம் ஆண்டே தீர்ப்பு பெற்றும், இதுவரை அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
இந்நிலையில் பகுதி மக்களின் மற்று குடியிருப்போர் சங்கத்தின் தொடர் முயற்சியின் விளைவாகத 21.05.2024 அன்று மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று சுற்றுச்சுவரை இடித்துள்ளனர். அப்போது அசன் மௌலானா 50 க்கும் பேற்பட்ட அடியாட்களுடன் நிகழ்விடம் வந்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய பகுதி மக்களுக்கும், குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் 88 வயது நிரம்பிய மூத்த சமூக செயல்பாட்டாளர் ராமச்சந்திர ராவ் மற்றும் உடனிருந்த நிர்வாகிகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து காவல்துறையினரும் போய்விட, அதன் பின்னர் ஆக்கிரமித்துள்ள இடத்தில் லாரிகளில் கட்டட கழிவுகளை கொண்டு வந்து கொட்டி மாநகராட்சியினர் தொடர்ச்சியாக பணிகளை செய்ய இயலாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளார்.இளங்கோ
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்பதை அரசிள் பல்வேறு துறைகளும் உறுதி செய்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றமும் ஆக்கிரமிப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கணபதி தெருவை ஆக்கிரமித்துள்ளதோடு, போராடும் பகுதி மக்களுக்கு அசன் மௌலானா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பேரவையில் உறுப்பினராக பொறுப்பேற்ற போது தான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு தகுதியற்றவராகிறார். எனவே பேரவை தலைவர் அசன் மௌலானாவின் மக்கள் நலனுக்கு எதிரான செயல்பாடுகளை ஆய்வு செய்து அவரை சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்த்து தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88“பொதுப்பாதையை ஆக்கிரமித்த எம்.எல்.ஏ, மீட்கச் சென்றவர்களைத் தாக்கினார்!”- கதறும் கொடுங்கையூர் மக்கள்!
http://dlvr.it/TBrF1P
Tuesday, 13 August 2024
Home »
» 'அசன் மௌலானா MLA-வை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்' - சபாநாயகரிடம் கொடுங்கையூர் மக்கள் புகாரின் பின்னணி