மேற்கு வங்கத்தில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தை மாநில காவல்துறை முதலில் விசாரணைக்கு எடுத்த நிலையில், தற்போது சிபிஐ-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது.ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - கொல்கத்தா
மேலும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றன. இந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய மனிதாபிமானமற்ற கொடூரமான செயலால், மருத்துவர்கள் சமூகம் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின்மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவ கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் படிக்க வைப்பார்கள்? ராகுல் காந்தி
நிர்பயா வழக்குக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் தோல்வியடைந்தது ஏன்... ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கதுவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை நடத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சமயத்தில், தாள முடியாத வலியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் நான் நிற்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அதோடு, இந்த சமத்துவம் குற்றவாளிகளுக்கு சமுதாயத்தில் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Doctor protest: `எனக்கும் மகள் இருக்கிறார்' - போராட்டத்தில் கலந்துகொள்ளும் திரிணாமுல் காங்கிரஸ் M.P
http://dlvr.it/TBwBWg
Wednesday, 14 August 2024
Home »
» பெண் மருத்துவர் Rape & Murder: `குற்றம்சாட்டப்பட்டவரை காப்பாற்ற முயற்சி?!' - ராகுல் கண்டனம்