அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இன்று அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.
அமைச்சர் உதயநிதி துணை முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என பல தரப்பு திமுக நிர்வாகிகள் அவ்வப்போது குரலெழுப்பி வந்தனர். இந்த நிலையில் உதயநிதியை துணைமுதல்வராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
திமுக இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வந்த உதயநிதி, அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 2009-ம் ஆண்டு தனது மகன் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தார். அதே வழியில் உதயநிதி ஸ்டாலினும் துணை முதல்வராக அறிவிக்கப்படவுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மு.க. ஸ்டாலின் விருது பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், "உங்களுக்கும், மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?" எனப் பேசியிருந்தார்.
இன்று காலையில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், `இன்று காலை 11:30 மணிக்கு உதயநிதி துணை முதலமைச்சராகிறார்’ என்று ட்வீட் செய்திருந்தார்.
#Breaking: #Tamilnadu to get a DyCM. Announcement possibility at 11.30 am, I hear.
Congratulations @Udhaystalin— RadhakrishnanRK, PhD. (@RKRadhakrishn) September 18, 2024
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் உதயநிதி. பின்னர் 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiYThirumavalavan: டெலிட் செய்யப்பட்டு மீண்டும் பதியப்பட்ட வீடியோ; நடந்தது என்ன? - திருமாவளவன் விளக்கம்
http://dlvr.it/TDN6D3
Wednesday, 18 September 2024
Home »
» `துணை முதல்வராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?’ - பரபரக்கும் திமுக முகாம்