கடந்த ஆண்டு அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் அப்போது பெரும் விவாதப் பொருளானது. ஆனால், அந்தக் குற்றசாட்டுகளை முழுவதுமாக மறுத்தது அதானி குழுமம். இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ஹிண்டன்பர்க் சமீபத்தில் வெளியிட்ட மற்றொரு ஆய்வறிக்கையில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச்சும், அவருடைய கணவர் தவால் புச்சும், அதானி நிறுவனத்துக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் பங்குகள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.அதானி செபி
இதை மாதபி பூரி புச்சும், அவருடைய கணவர் தவால் புச்சும், அதானி குழுமமும் மறுத்தன. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், `நடுநிலை இழந்த செபி தலைவர் மாதபி பூரி புச் ராஜினாமா செய்யவேண்டும்' என்ற குரல்களும் எழுந்தன.
இந்த நிலையில்தான், மாதபி பூரி புச்சும், அவரது கணவர் தவால் புச்சும் இணைந்து நேற்று மற்றொரு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில், மூன்று முக்கிய விளக்கங்களை குறிப்பிட்டிருக்கின்றனர்.விளக்கம் -1
மஹிந்திரா & மஹிந்திரா, பிடிலைட், டாக்டர் ரெட்டிஸ், அல்வாரெஸ் & மார்சல் போன்ற நிறுவனங்களுக்கு தவால் புச் ஆலோசகராக இருந்தது குறித்து காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. அவர் மேற்கொண்ட அந்த ஆலோசனைப் பணிகள், தாவல் புச்-சின் நிபுணத்துவம் மற்றும் அவர் ஹிந்துஸ்தான் யூனிலீவரில் செயல் இயக்குநராக பணியாற்றிய 35 ஆண்டுக்கால தொழில்முறையை அடிப்படையாகக் கொண்டது.
மாதபி செபி தலைவராவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது, 2016-2017-ம் ஆண்டு மாதபி புச் செபியில் சேர்வதற்கு முன்பே, தவால் புச் தனது ஓய்வுக்குப் பிறகு அகோரா அட்வைசரி நிறுவனத்தை தொடங்கினார். 2019-ம் ஆண்டு மஹிந்திரா & மஹிந்திரா இந்த அகோரா அட்வைசரியில் 94% பங்களிப்பை வழங்கியது. இது, தவால் புச்சுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்காக வழங்கப்பட்டது. மாதபி புச்
மேலும், தவால் புச்சின் அட்வைசரி பணிக்கும், செபி விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை பிடிலைட், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அவர் பணியாற்றிய அந்த வாய்ப்புகள் எல்லாம், அவரது தொழில்முறை பின்னணியின் அடிப்படையில் பெறப்பட்டது என்பதை இரு நிறுவனங்களும் தெளிவுபடுத்தியுள்ளன.
அதேபோல, அகோரா அட்வைசரி நிறுவனத்தின் மூலம் அனைத்து ஆலோசனை வருமானமும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே மாதபி புச் செபியில் இணைந்தப் பிறகு அகோரா அட்வைசரி தொடங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், தவால் புச்சின் திறமையை மட்டுமல்லாமல் அவர் பணியாற்றிய நிறுவனங்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.விளக்கம் -2
2017-ம் ஆண்டில் மாதபி புச் முதன்முதலில் செபி-யில் முழு நேர உறுப்பினராக சேர்ந்தபோது, அவரின் சொத்து, அதன் வருமானம் பற்றிய முழுத் தகவல்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், செபி-யின் விசாரணை வளையத்தில் இருக்கும் வொக்கார்ட் எனும் மருந்து நிறுவனத்துக்கு, மாதபி புச்சுக்கு சொந்தமான கட்டடம் வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. அதனால் விசாரணை சரியான முறையில் நடக்காது எனக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. வொக்கார்ட் நிறுவனம் தொடர்பான விசாரணைகளில் மாதபி புச்சுக்கு எந்த தொடர்பும் இல்லை.ராகுல் காந்தி - காங்கிரஸ்
வொக்கார்ட் நிறுவனம் தொடர்பான விசாரணைக் கோப்புகள் மாதபி புச்சுக்கு சென்றடையாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், கடுமையான அதிகாரப் பிரதிநிதித்துவ அமைப்பின் கீழ், இந்த விசாரணை நடக்கிறது. மேலும், அந்த நிறுவனத்துடனான வாடகை ஒப்பந்தம் சந்தை நடைமுறைகளுக்கு ஏற்பவே இருக்கிறது. வரிகளும் அதற்கு ஏற்றபடி செலுத்தப்பட்டு வருகிறது.விளக்கம் -3
மாதபி புச்சின், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பணியாளர் பங்கு விருப்பங்கள் (EPOP), ஓய்வூதியம் அனைத்தும் சட்டப்பூர்வமானதா... எனக் கேள்வி எழுப்பி குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலிருந்து மாதபி புச், வங்கி விதிகளின் படி பணி ஓய்வு பெற்றார். வங்கியின் விதிகளின்படி, ஓய்வுபெற்ற ஊழியர்கள் பத்து வருட காலத்திற்கு தங்கள் பணியாளர் பங்கு விருப்பங்களை (EPOP) பயன்படுத்தலாம். பணியிலிருந்து ராஜினாமா செய்தவர்களுக்குதான், 'மூன்று மாதங்களுக்குள் விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்த வேண்டும்' என்ற நிபந்தனை இருக்கிறது.Hindenburg - SEBI தலைவர் மாதபி
அதேபோல, சீரற்ற ஓய்வூதியம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ ஓய்வூதியம் என்பது ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியலின் பங்கின் வருடாந்திரத் திட்டத்தின் ஒரு பகுதி. அன்றைய சந்தை விலையைப் பொறுத்தும், வெவ்வேறு நிலைகளில் பணியாளர் பங்கு விருப்பங்கள் (ESOP) செயல்பாட்டின் காரணமாகவும் ஓய்வூதியம் மாறுபடும்.
எனவே, நாங்கள் நேர்மையான தொழில் வல்லுநர்கள். எங்கள் தொழில்முறை வாழ்க்கையை வெளிப்படைத்தன்மையுடனும், கண்ணியத்துடனும் நடத்தி, கறைபடாதவர்கள் என்ற சாதனையை சம்பாதித்துள்ளோம்.
உண்மைகளை சிதைப்பதற்கும், திரிப்பதற்கும், எங்கள் மீது அவதூறு வீசுவதற்கும் பலர் முயற்சிப்பதை பார்க்கிறோம். அது அனைத்தையும் தகர்க்க முடியும் என்பதில் நாங்களும் உறுதியாக இருக்கிறோம். இதுவரை, ஒவ்வொரு முறையும் புதிய பொய்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உண்மைகளைத் திரித்து, மீண்டும் மீண்டும் பொய்யான கதைகளை உருவாக்குவது மட்டுமே அவர்களின் நோக்கம் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.மோசடி: நடிகை கைது; திரைப்பிரபலங்களையும் விடாத `அதிக லாபம்' என்ற ஆசை வார்த்தை - என்ன நடந்தது?
http://dlvr.it/TDD4cC
Saturday, 14 September 2024
Home »
» Hindenburg : `உள்நோக்கம் கொண்ட அவதூறுகள்...' - `3' விளக்கங்களுடன் களமிறங்கிய செபி தலைவர்!