மத்திய அரசு 2018-ம் ஆண்டு சமக்ரா சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) எனும் pre.kg முதல் 12-ம் வகுப்புவரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2024 - 2025-ம் கல்வி ஆண்டிற்கான தொகையாக ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில அரசின் பங்கு ரூ.1,434 கோடி போக, மீதமிருக்கும் ரூ.2,152 கோடியை மத்திய அரசு நான்கு தவணைகளில் விடுவிக்க வேண்டும். முதல் தவணை ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு வந்துசேர்ந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு, முதல் தவணைத் தொகையை விடுவிக்கவில்லை.பிரதமர் மோடி
அதனால், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், "'சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்" என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதே நேரம் தமிழக காங்கிரஸ், ``மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது" எனக் குற்றம்சாட்டியது.
பா.ம.க தலைவர் அன்புமணியும், தன் எக்ஸ் பக்கத்தில், ``புதிய கல்விக் கொள்கையை ஏற்காததற்காக தமிழகத்திற்கான நிதி ரூ.573 கோடியை நிறுத்திவைப்பதா? உடனடியாக நிதி வழங்க வேண்டும்'' எனப் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ``தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால், இந்த ஆண்டின் தொகை மட்டுமல்லாமல் கடந்த ஆண்டின் கடைசி தவணையான ரூ.249 கோடியையும் மத்திய அரசு பிடித்து வைத்துள்ளது." எனக் குறிப்பிட்டார். நான்கு நாள்களுக்கு முன்புகூட இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.திமுக - முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் "மத்திய அரசு, தேசிய கல்விக்கொள்கையை ஏற்காத தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எஸ்.எஸ்.ஏ திட்ட நிதியை நிறுத்தி வைத்திருக்கிறது" என்ற தகவல் பொதிந்த ஒரு செய்தியின் பகுதியை பகிர்ந்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, ``தேசிய கல்வி கொள்கைக்கு தலைவணங்க மறுத்ததற்காக, சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதியை மறுப்பதும், அதே நேரம், இலக்குகளை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு நிதியை அள்ளி வழங்குவதும்தான் தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் மத்திய பா.ஜ.க அரசின் இந்த திட்டமா?
இது குறித்து முடிவெடுக்க நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY``ஓசியில் படம் பார்க்க, ரோட்டுக்கடைகளில் சாப்பிட..." - இளைஞரின் நூதன ட்ரிக்! - சிக்கியது எப்படி?
http://dlvr.it/TD0dld
Monday, 9 September 2024
Home »
» NEP: ``தலைவணங்க மறுப்பதால் கல்வி நிதியை நிறுத்தி வைப்பதா?" - மத்திய அரசை சாடும் முதல்வர் ஸ்டாலின்