புதுடில்லி : புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட ஆகும் செலவு எவ்வளவு என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.
செலவு எவ்வளவு :
புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவு குறித்து தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் நீமுச் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ரிசர்வ் வங்கிக்குக் கேள்வி எழுப்பியிருந்தார். சந்திரசேகரின் கேள்விக்கு ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரான் பிரைவேட் லிமிடட் நிறுவனம் (பிஆர்பிஎன்எம்பிஎல்) நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதன்படி புதிய 500 ரூபாய் தாள் ஒன்றினை அச்சிட ரூ.3.09 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ.3.54 செலவாகிறது என்று பதிலளித்துள்ளது.
English summary:
NEW DELHI: What is the cost to print the new 500 and 2,000 banknotes under the RTI Act, the Reserve Bank responded to the question.