பதாயூன்:சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தோற்கடிக்கப்பட்டால்தான், உத்தரப் பிரதேசத்துக்கு நல்ல நாள்கள் வரும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பதாயூனில் சனிக்கிழமை நடைபெற்ற பா.ஜ..,பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:சமாஜ்வாதி தலைவர் அகிலேஷும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் நல்ல நாள்கள் எப்போது வரும்? என்று கேள்வியெழுப்பி வருகின்றனர். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தோற்கடிக்கப்பட்டால்தான், இந்த மாநிலத்துக்கு நல்ல நாள்கள் வரும் என்று மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ராகுல் மீது தாக்கு: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் தன்னை பேச அனுமதித்தால் பூகம்பமே வரும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆனால், அவர் பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது. தன்னிடம் ஏதாவது உருப்படியான தகவல்கள் இருந்தால், ராகுல் தாராளமாகப் பேசலாம்.
பஞ்சரான சைக்கிள்: தனது கடின உழைப்பால் சமாஜ்வாதி கட்சியை நிறுவியவரான முலாயம் சிங், சமாஜ்வாதி - காங்கிரஸ் தேர்தல் கூட்டணியை எதிர்க்கிறார். ஆனால், அவரது மகன் அகிலேஷோ, பஞ்சரான "சைக்கிளில்' அமர்ந்து கொண்டு, காங்கிரஸுடன் கைகோத்துள்ளார்.பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. மாநிலத்தில் கூலிப்படையினரின் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டுமெனில், பா.ஜ.க.,வுக்கு ஓட்டளியுங்கள் என்றார் .
English Summary:
Patayun: SP, BSP failed in both parties, Uttar Pradesh will have good days, "Union Home Minister Rajnath Singh said.