பனாஜி: எம்.எல்.ஏ.,க்கள் விரும்பினால், டில்லியை சேர்ந்த ஒருவர் அடுத்த கோவா முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என மத்திய அமைச்சர் கட்காரி கூறியுள்ளார். இதன் மூலம் பாரீக்கர் கோவா அரசியலுக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவா முதல்வரா
க இருந்த பாரீக்கர், பிரதமர் மோடியின் அழைப்பு பேரில் மத்திய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார். இதனையடுத்து, முதல்வராக லஷ்மிகாந்த் பர்சேகர் பதவியேற்றார். இந்த மாநிலத்திற்கு அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜ அறிவித்துள்ளது. தற்போதைய முதல்வர் உட்பட பலரின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆனால், முதல்வர் வேட்பாளராக யாரும் முன்னிறுத்தப்படவில்லை.
இந்நிலையில், பாரீக்கர் மாநில அரசியலுக்கு திரும்புவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பிரதமர் மோடியும் பா.ஜ., தலைவர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், கோவா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தலைவரை தேர்வு செய்வார்கள். அவர், வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,வாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் டில்லியில் இருந்து வருபவர்களாகவும் இருக்கலாம். எம்.எல்.ஏ.,க்கள் விரும்பினால், பர்சேகரை கூட அடுத்த முதல்வராக தேர்வு செய்யலாம் என்றார்.
English Summary:
Panaji: MLAs want, Delhi would be the one to choose the next chief minister of Goa, Gadkari said the minister. Thereby raising the question of return parrikar Goa politics.