
Friday, 10 March 2017
ஆர்.கே.நகரில் போட்டி: ஞாயிறன்று முடிவு- மாபா.,

Tuesday, 7 March 2017
ஜெ., மரணத்தில் நீதி விசாரணை வேண்டும்: மாபா உறுதி

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைக்கும், தற்போது வெளியாகியுள்ள அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளது. போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா கீழே விழுந்தாரா என்பதை அறிய அப்பல்லோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையை வெளியிட வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை நீக்கக்கோரி நாளை(மார்ச் 8), 36 இடங்களில் உண்ணாவிரதம் நடக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் கருவி ஏழு நாட்கள் பொருத்தப்பட்டிருக்கும் என அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரே நாளில் உயிர்காக்கும் கருவியை எடுக்க உத்தரவிட்டது யார்? அதற்கு அனுமதி அளி்த்த ரத்த உறவு என்பதற்கு எம்மாதிரியான ஆதாரங்கள் வழங்கப்பட்டன.
ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி., பாதுகாப்பை விலக்க உத்தரவிட்டது யார்? அப்பல்லோவில் எஸ்.பி.ஜி., பாதுகாப்பு ஏன் வழங்கப்படவில்லை. எஸ்.பி.ஜி., வீரர்கள் பாதுகாப்பிலிருந்து ஓடிவிட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் என்ற விதி உள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு எஸ்.பி.ஜி., ஏன் வரவில்லை. இதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இதனால், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதி விசாரணை வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு மாபா.பாண்டியராஜன் கூறினார்.