மும்பை: மராட்டிய மாநிலத்திலிருந்து மும்பையை பிரிக்க யாராவது நினைத்தால், அவர்களின் கால்களை வெட்டி வீசுவேன் என நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்ரே மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தாதரில் நடைபெற்ற மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.மேலும் பேசிய அவர் மும்பை மாநகராட்சி உட்பட மராட்டிய மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநகராட்சிகளிலும் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி போட்டியிடும் என்றார். மேலும் பேசிய அவர் மும்பையில் பணப்புழக்கம் அதிகளவில் நடமாடுவதையடுத்து குஜராத் மக்கள் எப்படியாவது மும்பையை தங்கள் வசம் கொண்டு வரவேண்டும் என கனவு காண்பதாக குறிப்பிட்டார்.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் மும்பையை மராட்டியத்தில் இருந்து பிரிக்க மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா திட்டமிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அப்படி மும்பையை யாரேனும் பிரிக்க நினைத்தால் அவர்களின் கால்களை வெட்டுவேன் என ஆவேசமாக கூறினார். மத்தியிலும், மராட்டியத்திலும் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா நினைக்கிறது. ஆனால் அதை தடுப்பதே நவர்நிர்மான் சேனாவின் முதல் குறிக்கோள் என்றும் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
மேலும் பேசிய ராஜ்தாக்ரே மும்பை மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க தாம் சம்மதம் தெரிவித்ததாக குறிப்பிட்டார். ஆனால் 7 முறை அழைப்பு விடுத்தும் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்ரே நிராகரித்தார். இதனால் மராட்டிய மக்களின் நலனில் சிவசேனாவுக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாக தெரிவதாக சாடினார். தவிர சிவசேனா இரட்டை வேடம் போடுவதாக புகார் தெரிவித்தார்.
English summary:
Mumbai: If you think someone has to separate Mumbai from Maharashtra, MNS chief Raj Thackeray to spread their legs threatened to cut caused a stir. The meeting, held at Dadar in Mumbai MNS threat to public speaking, he spoke said that elections in Maharashtra, including Mumbai Municipal Corporation Municipal Corporations MNS would run all over the place.