
உயிர் பறித்த சதிக்கூட்டம் :
இதில் பேசிய பி.எச்.பாண்டியன், ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட கறுப்பு பூனை படையை வாபஸ் பெற்றது ஏன்? ஜெ., மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ட்ட போது அவருடன் கறுப்பு பூனை படை செல்லவில்லை. மருத்துவமனையில் நிராயுதபாணியாக இருந்த ஜெயலலிதாவின் உயிரை சதிக்கூட்டம் பறித்து விட்டது.ஜெயலலிதா மறைந்த உடனேயே பொதுச் செயலாளராக முயற்சித்தவர் சசிகலா. அனைவரும் நல்லவர்கள் இல்லை. அனைவருக்கும் பணத்தாசை உண்டு. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியை தான் பெரும்பாலான தொண்டர்கள் அதிமுக என ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
நடந்தது என்ன?
பொன்னையன் பேசியதாவது: மருத்துவமனைக்கு ஜெ.,வை கொண்டு செல்லும் முன்னர் போயஸ் தோட்டத்தில் நடந்தது என்ன? ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான கொலைகாரர்களை கண்டுபிடிக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்புடைய அறிக்கை அரசியல்வாதி அறிக்கை போல் உள்ளது.அப்பல்லோவில் ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை தெரிவிக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அரசியல்வாதி போல் பேசுகிறார். சிகிச்சைக்காக ஜெயலலிதாவை ஏன் வெளிநாடு அழைத்து செல்லவில்லை. வீட்டிலேயே வைத்து ஜெயலலிதாவுக்கு யார் சிகிச்சை அளித்தது.இவ்வாறு அவர் பேசினார்.