வாஷிங்டன்: திருநெல்வேலியில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய தம்பதியினரின் மகள் ஒருவரை கல்வி குறித்து பிரசார குழுவிற்கு மிச்செல் ஒபாமா தேர்வு செய்துள்ளார்.
இந்த குழுவிற்கு தேர்வான ஸ்வேதா பிரபாகரன் என்பவர், கடந்த 1998 ல் தனது பெற்றோருடன் நெல்லையிலிருந்து அமெரிக்கா வந்தவர். இவர், விர்ஜினியாவில் உள்ள தாம்சன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஜெபர்சன் உயர் நிலை பள்ளியில் படித்து வருகிறார். இவர் வரும் தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களாக மாற வேண்டும் என்பதற்காக Everybody Code Now! என்ற தொண்டு நிறுவனத்தை தோற்றுவித்து சி.இ.ஓ.,வாக உள்ளார். இவரது பணியை ஊக்குவிக்கும் வகையில், கல்விதுறையில், 'better make room' என்ற கல்வித்துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த குழு, மிச்செல் ஒபாமாவால் தோற்றுவிக்கப்பட்டது ஆகும். இந்த குழுவில் 12 உயர் நிலை பள்ளிமாணவர்கள் மற்றும் 5 கல்லூரி மாணவர்கள் இடம்பெறுவார்கள். இவர்கள் இன்று வெள்ளை மாளிகை சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் :
இந்த குழுவில் தேர்வு செய்யப்பட்டது பெருமை அளிக்கிறது. மாணவர்கள் கல்லூரி செல்வது தொடர்பான கொள்கையை இன்னும் அதிகமானவர்களுக்கு விளக்க முடியும். இந்த குழுவில் இணைந்து செயல்படுவதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன் என ஸ்வேதா கூறியுள்ளார். இவர் பரதநாட்டியம் பயின்றவர். சர்வதேச கல்வியறிவு சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டவர். இவர் கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையினால் கவுரவிக்கப்பட்டவர் ஆவார்.
English summary:
Washington: Tirunelveli from the couple's daughter, who settled in the US Michelle Obama has chosen the education committee of the campaign.