
ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு, முதல்வராக உள்ளார்; 19 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இங்கு, மேலும், மூன்று பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும்; எனினும், தெலுங்குதேச கட்சி ஆட்சி அமைத்தது முதல், அந்த இடங்களுக்கு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட வில்லை.
இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சரவையை விரிவு படுத்த முடிவு செய்துள்ளார். அதன்படி, சந்திரபாபு நாயுடுவின் மகன், நர லோகேஷ், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
அவரை தவிர, எதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசில் இருந்து விலகி, ஆளுங்கட்சிக்கு ஆதரவு தெரிவித்த, இரண்டு, எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.
சந்திரபாபு நாயுடு, ஜனவரி 15ல், சுவிட்சர்லாந்திற்கு செல்ல உள்ளார். அதற்கு முன் அல்லது அவர் வெளிநாடு சென்று திரும்பிய பின், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என, தெரிகிறது.
மாநில அமைச்சர்கள் சிலர் மீது, சந்திரபாபு நாயுடு, அதிருப்தியில் உள்ளார்; அவர்கள் மாற்றப்பட்டு, புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என, தெரிகிறது.
அமைச்சர்கள் சிலர் மீது, சந்திரபாபு நாயுடு, அதிருப்தியில் உள்ளார்; அவர்கள் மாற்றப்பட்டு, புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.
English summary:
Amravati: Andhra Pradesh chief minister Chandra Babu Naidu's son Nara Lokesh, soon, will take over as Chief Minister, reported.