கவுகாத்தி: 'டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு, 'டிஜிட்டல்' முறையை பயன்படுத்தினால், 0.75 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்' என, அசாம் அரசு அறிவித்துள்ளது.
சலுகை :
ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதன் விலையில் 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
1.5 சதவீத தள்ளுபடி :
இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள, 0.75 சதவீதத்தைத் தவிர, 'டிஜிட்டல்' முறையை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வாங்கினால், 0.75 சதவீதம் தள்ளுபடி கூடுதலாக அளிக்கப்படும் என, முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, அசாம் பா.ஜ., அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அசாம் மாநில மக்கள் மொத்தம் 1.5 சதவீத தள்ளுபடி பெறுவர். இச்சலுகை விலை எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் வாட் வரியில் ஈடுசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஜன.,1 முதல் அமலுக்கு வருகிறது.
விவசாயிகளுக்கு பரிசு :
அடுத்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் விவசாய விதைகள் மற்றும் உரங்கள் வாங்கும் முதல் 10 விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 பரிசு வழங்கப்படும் எனவும் அசாம் அரசு அறிவித்துள்ளது.
English Summary:
Guwahati : 'In order to encourage the digital transaction, petrol, diesel purchase,' digital 'method used, the discount will be 0.75 per cent as' The Assam government has announced.