
கலாவுக்கு கட்சியின் தொண்டர்களிடம் கடும் எதிர்ப்பு உள்ளது.
சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்யக்கூடாது எனக்கோரி, எம்.பி., சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்கு, சசிகலா புஷ்பாவும் போட்டியிட உள்ளார் எனக்கூறப்படுகிறது.
இதற்காக, விண்ணப்பம் தாக்கல் செய்ய, அவர் இன்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளார் என தகவல் பரவியது. இதையடுத்து, இணை ஆணையர் மனோகரன் தலைமையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கட்சி தொண்டர்களும் ஏராளமான அளவில் குவிந்து இருந்தனர்.
அடி, உதை:
ஆனால், எதிர்பார்த்தபடி சசிகலா புஷ்பா வரவில்லை. அவர் சார்பில், அவரது வழக்கறிஞர்கள் சிலர் வந்து இருந்தனர். இதனால், கட்சி அலுவலகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தினர் தாக்கியதில் சிலர் படுகாயம் அடைந்தனர். ரத்தம் சொட்ட சொட்ட இருந்த சிலரை போலீசார் அங்கு இருந்து அகற்றினர். கட்சி அலுவலகத்தில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
English Summary:
Chennai: Chennai, Royapettah the AIADMK headquarters, there was heavy fighting in the afternoon. Sasikala Pushpa's lawyers