
தமிழக அரசின் மிக முக்கியமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி. சசிகலா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலருக்கும் சேகர் ரெட்டி பினாமி என கூறப்படுகிறது.
சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையில் ஏற்கனவே 137 கிலோ தங்கம் சிக்கியது.
அதேபோல் ரூ170 கோடி ரொக்கமும் பிடிபட்டது. இன்றும் ரூ24 கோடி சிக்கியது. இதில் ரூ100 கோடி அளவுக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடங்களில் இன்றும் 40 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடத்தில் இன்றும் 40 கிலோ தங்கம் சிக்கியது. இதுவரை சேகர் ரெட்டியின் வீடு உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 167 கிலோ தங்கம் சிக்கியுள்ளது.
English summary:
IT department today seized 40 Kg gold from "Benami" Sekhar Reddy in Chennai.