மைசூரு: ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள தடை நீக்கவும், 'பீட்டா' அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், மைசூரில் தமிழக ஐ.டி., ஊழியர்கள் அமைதி போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மைசூரில் பணிபுரியும் தமிழர்கள் ஒன்றிணைந்து, மைசூரு லட்சுமிபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன், நேற்று காலை, 10:00 மணிக்கு குவிந்தனர்.
விப்ரோ, இன்போசிஸ், எல் அண்ட் டி., உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தமிழர்கள் அறவழி போ
ராட்டம் நடத்தினர்.
விப்ரோவில் பணிபுரியும் மதுரையை சேர்ந்த புருஷோத்தம் மற்றும் அவரது நண்பர்கள், 40 பேர் நேற்று முன்தினம், நகர போலீஸ் கமிஷனரிடம் முறையான அனுமதி பெற்றனர்.
அவர்களுடன், வாட்ஸ் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
'வேண்டும்... வேண்டும்... ஜல்லிக்கட்டு வேண்டும்', 'வேண்டாம்... வேண்டாம்... பீட்டா அமைப்பு வேண்டாம்...' என்று கோஷங்கள் எழுப்பி, ஜல்லிக்கட்டுக்கு விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தினர்.காலை, 10:00 மணிக்கு துவங்கிய போராட்டம் பகல், 1:00 மணி வரை நீடித்தது. ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் மைசூரு தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
English summary:
Mysore: Remove the ban on Jallikattu, 'beta' organization calling for a ban, TN in Mysore IT staff protested quietly.