பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுதொடர்பாக, பெங்களூரு மிரர் பத்திரிக்கை புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பெண் காவலர்களிடம் அழுதவாறு புகார் தெரிவித்ததாக புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் டிச. 31-ம தேதி இரவு புத்தாண்டு கொண்டாடம் நடந்தது. இதில், நகரெங்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் சாலைகளில் ஆடிபாடியும் வாகனங்களில் சென்றும் புத்தாண்டை கொண்டாடினர்.
பெங்களூரு எம்.ஜி. சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண்களிடம் போதையில் சில ஆண்கள் தவறாக நடந்து கொண்ட புகைப்படங்கள் பத்திரிக்கையில் வெளியாகின. இதில் பாதிக்கப்பட்ட சில இளம் பெண்கள் அழுது புழம்பியவாறு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறியதாவது:
புத்தாண்டு கொண்டாடத்திற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதுவும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு தரவும் உத்தரவிடப்பட்டது. எம்.ஜி. சாலையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது. இருப்பினும், கட்டுக்கடாங்காத கூட்டத்தில் சில விரும்பதகாத சம்பவங்கள் நடந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அதை கட்டுபடுத்த போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக மாநில டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் கூறுகையில், இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக இதுவரை புகார் வரவில்லை. இருப்பினும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
English summary:
The young women who attended the New Year celebration in Bangalore had been reports of sexual harassment and have had terrific photos