
நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நிரந்தரமாக நீக்கிக நேற்று நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் முடிவெடுத்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பின்னர் பேசும்போது நடிகர் சங்கத் தலைவர் நாசர் மேலோட்டமாகவும், செயலாளர் விஷால் பகிரங்கமாகவும் கூறினர்.
இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான நடிகை ராதிகா கூறுகையில், இந்த நீக்கத்திற்கான காரணத்தை அவர்களால் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை விஷாலை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தூக்குவதால் அதை திசை திருப்பும் செயலாக இந்த நீக்கத்தை சொல்லியுள்ளார்களோ என்று கருதுகிறேன்.
ராதாரவி ஏற்கனவே தன்னை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து ஸ்டே வாங்கியுள்ளார் என்று கூறியுள்ளார் ராதிகா.
English summary:
Actress Radhika Sarathkumar has come down heavily on actor Vishal for sacking her husband and former Nadigar Sangam president Sarathkumar.