லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவை தொடர்ந்து, இளம் அமைச்சர் ஒருவர், அலுவலகத்தை சுத்தப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உ.பி., முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் அனைவரும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். இதற்காக வருடத்தில் 100 மணி நேரம் செலவிட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனை ஏற்று, அமைச்சராக உள்ள உபேந்திர திவாரி என்பவர், சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தையும், நடைபாதைகளையும் துடைப்பத்தால் சுத்தப்படுத்தினார். இதனை பார்த்த அதிகாரி எதையும் செய்ய இயலாமல் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.