
Tuesday, 28 March 2017
போராட்டக்குழுவினரிடம் புதுக்கோட்டை கலெக்டர் உறுதி

Thursday, 2 February 2017
மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாருக்கு 6 வாரம் சிறை: மேலூர் கோர்ட் உத்தரவு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை சேர்ந்த உசேன் முகமது, ஜவஹர் அலி ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பிரிப்பது(சப் டிவிசன்) தொடர்பாக மேலூர் தாசில்தார் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை அணுகியுள்ளனர். ஆனால், அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலத்தை அளந்து பிரிக்க உத்தரவிட்டது. இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
உத்தரவு:
இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட் மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்கவும், அவர்களது வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது.
English Summary:
Melur: Court orders that have not met the Collector of Madurai, Melur Melur tahsildar put in jail for 6 weeks franchising franchising District Court.
Saturday, 21 January 2017
தயார் நிலையில் அலங்காநல்லூர் வாடிவாசல்!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் படை போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் நடத்தி வரும் அறவழி போராட்டத்தால் மத்திய, மாநில அரசுகள் மிரண்டன.
இதனையடுத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டி டில்லி சென்ற தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் மோடி கை விரித்தார். இருப்பினும் மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இதன்பின் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கும் வகையில் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சகங்களின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த சட்ட வரைவுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, சட்ட துறை, உள்துறை அமைச்சகங்கள் அனைத்தும் ஒப்புதல் அளித்தன.
தமிழக கவர்னர் மும்பையிலிருந்து வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து இன்று சென்னை திரும்புகிறார். அவரின் ஒப்புதலுக்கு பின் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக, இன்று(ஜன.,21) அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், நாளை(ஜன.,22), அலங்காநல்லுாரில், ஜல்லிக்கட்டு நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக அலங்காநல்லூர் வாடிவாசலை தயார் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டு தயார் செய்யப்பட்டது. மதுரை கலெக்டர் வீரராகவராவ், அலங்காநல்லூர் வாடிவாசலை நேற்று(ஜன.,20) ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் கலந்தாலோசித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ‛ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Madurai, ordinance enacted in order to hold back Alanganallur jallikattu banner been placed on standby. Madurai Collector T.M.Veeraraghav examined.