புதுடில்லி: டில்லி பல்கலையில் ஏராளமான மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
போராட்டம்:
கடந்த 22ம் தேதி டில்லி பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள ராம்ஜாஸ் கல்லூரியில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட உமர் காலித் பேச இருந்தார். இதற்கு ஏபிவிபி மாணவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து உமர் காலித் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பாதுகாப்பு:
ஏபிவிபி மாணவர் அமைப்புக்கு பயங்கரவாதிகள் தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரரின் மகளும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து அந்த மாணவிக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து மாணவிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து டில்லியில் மாணவர்கள் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள போவதில்லை எனவும், இருப்பினும் மாணவர் போராட்டத்திற்கு நான் ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இந்த மாணவிக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கண்டனம் தெரிவித்தார். அவர் இடதுசாரிகளுடன் சேர்ந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
பாதுகாப்பு:
இந்த நிலையில், டில்லி பல்கலையில் பேச்சு சுதந்திரம் கேட்டும், 22ம் தேதி போராட்டத்தின் போது மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் மாணவர் அமைப்பினர் பேரணி நடத்தினர். மாணவர் அமைப்பினர் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு சென்றனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
English summary:
NEW DELHI: Delhi University and went on to rally large numbers of students.