
முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், தற்போது சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான, காயத்ரி பிரஜாபதி மீது, பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; அதை
த் தொடர்ந்து அவர் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு, கவர்னர் ராம் நாயக் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்; அதில் கூறப்பட்டு உள்ளதாவது:பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காயத்ரி பிரஜாபதி தொடர்ந்து அமைச்சராக செயல்படுவது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது; அதை அவமதிப்பது போலாகும்.
வெளிநாட்டுக்கு தப்பி செல்ல, அவர் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவரது பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டுள்ளது; விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் அவர் எந்த அடிப்படையில், தொடர்ந்து அமைச்சராக உள்ளார் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
English summary:
Lucknow: 'In the case of the rape accused are absconding, Gayatri Prajapati, continues to minister to explain how "the Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav, sent a letter to Governor Ram Naik.