சென்னை: குடியரசு தின விழாவில், முதன் முறையாக, முதல்வர் பன்னீர்செல்வம், இன்று தேசியக் கொடியேற்றினார்.
தனி கவர்னர் இல்லை : சென்னையில், ஆண்டு தோறும் மெரினா கடற்கரையில், காந்தி சிலை அருகே, குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. மாநில கவர்னர் தேசியக் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, தமிழகத்திற்கு தனி கவர்னர் நியமிக்கப்படவில்லை. மஹாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக உள்ளார். இன்று, அவர் மஹாராஷ்டிராவில் நடைபெறும் குடியரசு தின விழாவில், தேசியக் கொடியேற்றுகிறார். எனவே, தமிழகத்தில் குடியரசு தின விழாவில், தேசியக் கொடியேற்றும் வாய்ப்பு, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கிடைத்துள்ளது.
கொடியேற்றினார் முதல்வர் : இன்று காலை, 8:00 மணிக்கு, தேசியக் கொடியேற்றி வைத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தொடர்ந்து காவலர்கள், வேளாண் துறையினர் உள்ளிட்டோருக்கு முதல்வர் விருதுகளை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
எதிர்க்கட்சிகள் பங்கேற்பு : குடியரசு தின விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., செயல் தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர் கலந்து கொண்டனர்.
English summary:
Chennai, on the occasion of Republic Day, for the first time, the Chief Minister Panneerselvam, Nationalflag hosting today.