Tuesday, 28 March 2017
விவசாயிகள் போராட்டம்: தமிழக அரசு ஏற்பாடு

Monday, 27 March 2017
மக்களின் ஆதரவு இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது:பொன்.ராதாகிருஷ்ணன்

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
குழப்பம் வேண்டாம்:
ஹைட்ரோ கார்பன் திட்டம் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக குழப்பம் அடைய வேண்டாம் நெடுவாசல் போராட்ட குழுவினரிடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கி உள்ளார்.ஏற்கனவே தேர்வான நிறுவனங்களுடன் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என டுவிட்டரில் அவர்பதிவிட்டுள்ளார்.
Friday, 10 March 2017
நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி: பொன்.ராதா

தலைமையின் முடிவு:
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பற்றி கட்சித் தலைமை முடிவு செய்யும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் அளித்தும் மீனவ அமைப்பினர் சந்திக்கவில்லை. மீனவர்களை யார் இயக்குகின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை. நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
English summary:
Chennai: neduvasal pon Minister said that the struggle we're glad to be dropped.
Saturday, 4 March 2017
ஹைட்ரோ கார்பன் திட்டம்:கோட்டைக்காடு போராட்டம் வாபஸ்

போராட்டக்குழுவினர் தகவல்:
போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary:
Pudukkottai: hydrocarbon project in the fight against the Pudukkottai district kottaikkadu temporarily withdrawn. The fight was temporarily withdrawn after discussions with the district collector struggle reports are obtained.
Friday, 3 March 2017
'ஹைட்ரோ கார்பன்' 31 இடங்களில் ஆய்வு

கடந்த, 2015ல், சிறிய அளவிலான நிலப் பகுதிகளில் மீத்தேன், பெட்ரோல் உள்ளிட்ட, 'ஹைட்ரோ கார்பன்' கனிமங்களின் ஆய்வுப் பணிகளுக்கு ஊக்கமளிக்க, தனி கொள்கை வகுக்கப்பட்டது. அதன்படி, அந்த பணிகளை பெறும் ஒப்பந்ததார நிறுவனங்களுக்கு, பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது. அப்பணிகளுக்காக, மத்திய அரசு, கடந்த ஆண்டில், 'டெண்டர்' கோரியது. அதில், 31 இடங்களில் பணிகளை மேற்கொள்ள, 22 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், காரைக்கால் மற்றும் நெடுவாசல் ஆகிய இரு இடங்கள்; அசாம் - 9; ஆந்திரா - 4; ராஜஸ்தான் - 2; மத்திய பிரதேசம் - 1; மும்பை கடல் பகுதி - 6 மற்றும் குஜராத் கட்ச் கடற்பகுதியில், 2 இடங்களில் இந்த ஆய்வு துவங்கப்பட்டுள்ளது.
English summary:
In Tamil Nadu, where there are problems neduvasal research projects currently going on in the country, and has given permission for 29 locations.
Thursday, 2 March 2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பில்லை: பொன்.ராதா

Wednesday, 1 March 2017
ஹைட்ரோ கார்பன் திட்டம்: அனுமதி பெறவில்லையாம்
ஸ்ரீபெரும்புதுார் : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க, தமிழக அரசிடம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் அனுமதி பெறவில்லை என, ஒரகடத்தில் நடைபெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டட திறப்பு விழாவில், தமிழக அமைச்சர், கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஒரகடம், 'சிப்காட்' தொழில் வளாகத்தில், 7,782 சதுர அடி பரப்பளவில், 1.90 கோடி மதிப்பில், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா, மாசு கட்டுப்பாட்டு வாரிய முதன்மை செயலர், அதுல்ய மிஸ்ரா தலைமையில், நேற்று நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, மாசு கட்டுப்பாடு துறை அமைச்சர், கே.சி.கருப்பணன், குத்துவிளக்கேற்றி கட்டடத்தை திறந்தார்.
இதில், மாவட்ட ஆட்சியர், கஜலட்சுமி, மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர், சுந்தரகோபால், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர், கண்ணன், சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலர், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில், அமைச்சர் கருப்பணனிடம், 'நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அனுமதியை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், மத்திய அரசு பெற்றுள்ளதா' என, கேள்வி எழுப்பினர். அதற்கு, ''அனுமதி பெறவில்லை,'' என, அமைச்சர் பதில் அளித்தார்.
மேலும், ''எண்ணெய் எடுக்க எங்களிடம் அனுமதி பெற வரும் போது, அனுமதிப்பதா, வேண்டாமா... என்பது குறித்து அரசு முடிவு எடுக்கும். காஞ்சிபுரத்தில் கைத்தறி சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரிக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, அரசு பரிசீலனை செய்கிறது,'' என்றார்.