
மாற்றம்:
பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு, வணிக பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர்களை, வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதம்தோறும், காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
ரூ.66 உயர்வு:
சென்னையில், ஜன., மாதம், வீட்டு சிலிண்டர், 594.50 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, அதன் விலை, 66.50 ரூபாய் உயர்ந்து, 661 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம், சென்னையில், 19 கிலோ, வணிக பயன்பாட்டு சிலிண்டர், 1,233.50 ரூபாய்க்கு விற்பனையானது. இம்மாதம், அதன் விலை, 104.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 1,338 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இரு மாதங்களாக, காஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது' என்றார்.
English Summary:
Chennai: Chennai, Home cooking gas cylinder price, rose 66.50 rupees.