பெங்களூரு: மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நெல்லை கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவிலும் கமல் மீது புகார் அளிக்கப்பட்டது. பசவேஸ்வர மடத்தை சேர்ந்த பிரனவானந்தா என்பவர் பெங்களூரு போலீஸ் ஸ்டேசனில் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.
Monday, 27 March 2017
Wednesday, 22 March 2017
Wednesday, 8 March 2017
பெங்களூருவுக்கு மாற்றாக புதிய நகரம்
பெங்களூரு : பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால், அதற்கு மாற்றாக புதிய தொழில் நகரத்தை கர்நாடக அரசு உருவாக்க உள்ளது.
விரைவில் புதிய நகரம் :
பெங்களூருவுக்கு மாற்றாக கோலார் கோல்ட் பீல்ட்ஸ் (கேஜிஎப்) என்ற நகரத்தை 11,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க உள்ளது. பெங்களூருவில் இருக்கும் 20 லட்சம் பேரை இந்த புதிய நகரத்திற்கு மாற்றவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய நகரின் குடிநீர் தேவைக்காக, மங்களூருவில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்தீகரிப்பு ஆலை ஒன்றை நிறுவி, அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.
பணிகள் தீவிரம் :
உலகரத்தரம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு இந்த நகரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய நகருக்கான மாதிரி வடிவம் தயார் செய்யப்பட்ட பிறகு, இதற்கான செலவு குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த புதிய நகரத்திற்காக பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட்டின் நிலத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கர்நாடக நகர வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நகரம் மற்றும் கர்நாடகாவின் முக்கிய நகரங்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.3500 கோடி செலவில் 4 கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து ரூ.400 கோடி கடன் வாங்குவதற்கான நடவடிக்கையையும் கர்நாடக அரசு விரைவில் துவக்க உள்ளது. புதிய நகரம் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான திட்டங்களுக்கு கர்நாடக அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்க உள்ளது.
English summary:
Bangalore: Bangalore is the increase in population, but rather the city in Karnataka state, is to create new jobs.

Friday, 3 March 2017
கர்நாடகாவில் போராட்டம்: சர்ச்சைக்குரிய மேம்பால பணி நிறுத்தம்
பெங்களூரு : மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், சர்ச்சைக்குரிய இரும்பு மேம்பால பணிகளை கர்நாடக அரசு நிறுத்தி உள்ளது.
சர்ச்சை மேம்பாலம் :
கர்நாடகாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் மட்டும் எந்த போக்குவரத்து இடையூறும் இன்றி செல்வதற்காக ரூ.2100 கோடி செலவில் இரும்பு மேம்பாலம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது. பல்லாரியில் இருந்து கேம்பிகவுடா விமான நிலையம் வரை இந்த இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட இருந்தது. இந்த திட்டத்தில் பல கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த திட்டத்திற்காக அவ்வழியில் இருக்கும் சுமார் 800 க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என ஆளும் காங்., தலைவர்கள் பலர் முதல்வர் சித்தராமைய்யாவிடம் தெரிவித்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றினால் வரும் தேர்தலில், தங்களின் கட்சிக்கு அது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் சித்தராமைய்யாவிடம் கூறி உள்ளனர்.
இதனையடுத்து இரும்பு மேம்பால பணிகளை கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
English summary:
Bangalore: People struggle raging, the Karnataka government has suspended the controversial steel flyovers tasks

Saturday, 18 February 2017
சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி: கர்நாடக அரசு கடிதம்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும் என அம்மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இந்த வழக்கு கடந்த 2003-ம் ஆண்டு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.
செலவு ரூ.12.04 கோடி:
இந்நிலையில் இந்த வழக்கு செலவு குறித்து தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும். இது கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2016 வரை செய்யப்பட்ட செலவு. இதில் நீதிமன்ற கட்டணம், நீதிபதி, வழக்கறிஞர்கள் ஊதியம், பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் அடக்கம். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 20 January 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூருவில் போராட்டம்
பெங்களூரு: ஜல்லிக்கட்டை வலியுறுத்தி பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள், மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடகாவிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்தது. பெங்களூருவில் உள்ள டவுன்ஹால் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் கர்நாடகாவில் பணிபுரியும் தமிழர்கள், அங்கு வசிக்கும் தமிழர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும், பீட்டாவையும் தடை செய்ய வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
English summary:
Bangalore: Bangalore gravel urging thousands took part in the demonstration. Emphasizing the struggle is taking place across the gravel. Tamils all over the world, to support the students in struggle. In Karnataka, the battle took place in support of Jallikattu. Town Hall in Bangalore in Karnataka will work at the eve of the struggle of the Tamils, the Tamils living there, thousands took part. As part of the fight to hold the gravel, stressing the need to ban the chanting beta.

Monday, 9 January 2017
காவிரி இழப்பீடு வழக்கில் புதிய உத்தரவு
புதுடில்லி: காவிரியில் தண்ணீரை திறந்து விடாத, கர்நாடக அரசு, 2,500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்ய வழக்கில், உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில், 2013ம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்த மனுவில், ‛21 ஆண்டுகளாக சம்பா, குறுவை பயிர்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் கர்நாடகா அரசு தண்ணீரை திறந்துவிட்டது கிடையாது. காவிரி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை அந்த அரசு எப்போதும் மதிப்பதில்லை. மத்திய அரசு பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் கர்நாடக அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால் தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி தடைப்பட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கு ரூ.1,045.75 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தீர்ப்பாயத்தின் உத்தரவை நிறைவேற்றாததால் ஏற்பட்ட நஷ்டங்களுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.1,434 கோடி அபராதம் விதிக்க வேண்டும்.இந்த இழப்பீட்டை தமிழகத்துக்கு மொத்தமாக சேர்த்து ரூ.2,500 கோடி வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள், ஒரு வாரத்தில், சாட்சியங்கள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்; அதன் பிறகு, நான்கு வாரங்களில், ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, விசாரணையை ஐந்து வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.
English summary:
NEW DELHI: dares to release water in the Cauvery, the Karnataka government, demanding compensation of Rs 2,500 crore, the State Government to file the case, the Supreme Court issued a new directive.

Thursday, 5 January 2017
வறட்சியால் பாதித்த கர்நாடகாவிற்கு ரூ.1,782 கோடி
புதுடில்லி: வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவிற்கு ரூ.1,782.44 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
வறட்சி:
கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததால், 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. இதனால் அணைகளில் போதிய தண்ணீர் இல்லை எனவும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. கடந்த அக்டோபர் 19ம் தேதி கர்நாடகாவை வறட்சி பாதித்த மாநிலமாக மாநில அரசு அறிவித்தது. மொத்தமுள்ள 176 தாலுகாக்களில் 139 தாலுகாக்கள் வறட்சி பாதித்தவை எனவும் அறிவிக்கப்பட்டது.
கோரிக்கை:
முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி குழுவினர் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கர்நாடகாவிற்கு ரூ.4,702 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மத்திய குழு கர்நாடகா வந்து மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
நிதி ஒதுக்கீடு:
இந்நிலையில், டில்லியில் ராஜ்நாத் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை செய்தது. இந்த கூட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.1,782.44 கோடி ஒதுக்கப்படுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், கர்நாடகா மற்றும் உத்தர்கண்ட் மாநிலங்களில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.208.91 கோடி ஒதுக்குவது எனவும், இதில் கர்நாடகாவிற்கு ரூ.188.91 கோடியும், உத்தர்கண்ட் மாநிலத்திற்கு ரூ.20 கோடியும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.
English summary:
NEW DELHI: Drought-hit Karnataka Cabinet Committee approved an allocation of Rs .1,782.44 crore.

Wednesday, 4 January 2017
காவிரியில் தண்ணீர்: கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் மீண்டும் உத்தரவு
புதுடில்லி : காவிரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு :
காவிரி நதிநீர் வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 2000 கனஅடிநீர் திறந்து விட வேண்டும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 7 ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது.
பிப்ரவரி 7 ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும். தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி என ஒவ்வொரு தரப்பிற்கும் பதிலளிக்க 3 வார கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் வாதம் :
முன்னதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் தமிழகத்தில் 60 சதவீதம் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர்ந்து காவிரியில் விநாடிக்கு 2000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என வாதத்தை முன்வைத்தார்.
தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட், மறுஉத்தரவு வரும் வரை கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
English summary:
NEW DELHI: 2,000 cubic feet of water per second to open in the Cauvery Karnataka State Supreme Court today ordered back

Monday, 26 December 2016
கர்நாடகா : 900 சிலிண்டர் வெடித்து விபத்து
பெங்களூரு : கர்நாடகாவில் காஸ் சிலிண்டர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 900 சிலிண்டர்கள் வெடித்து சாம்பலாயின.
கோலார் அருகே சிந்தாமணி என்ற பகுதியில் இந்த குடோன் உள்ளது. இங்கு திடீரென சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 சரக்கு வாகனங்களும் தீக்கிரையாகின. இங்கு பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. தீ முழுவதும் அணைக்கப்பட்டு தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
English Summary:
Bangalore: There was a fire in the storeroom cylinders. The 900 cylinders exploded.

சித்தராமையா ஷூ லேசை கட்டியது யார்?: புதிருக்கு புதிய விளக்கம்
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஷூ லேசை கட்டி விட்டவர் அவரது உறவினர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு:
சமூக வலைதளங்களில் கர்நாடக முதல்வர் சி்த்தராமையாவிற்கு, நபர் ஒருவர் ஷூ லேசை கட்டிவிடுவது போன்ற காட்சிகள் மற்றும் வீடியோ வேகமாக பரவ துவங்கின. இந்த புகைப்படம் மைசூருவில் எடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதில் மற்றொரு காலிலும் உள்ள ஷூ லேசை கட்ட சி்த்தராமையா பணிப்பது போன்ற படங்களும் இடம்பெற்றிருந்தன. சித்தராமையாவின் உதவியாளர் அல்லது அரசு அலுவலர் எனவும் ஒரு வதந்தி பரவியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ., உள்ளிட்ட அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள கர்நாடக முதல்வரின் மீடியா ஆலோசகர் முதல்வரின் ஷூ லேசை கட்டியது உதவியாளரோ, அரசு அலுவலரோ அல்ல. அவரது உறவினர் என தெரிவித்துள்ளார்.
English Summary:
Bangalore: Karnataka Chief Minister Siddaramaiah, who tied his cousin's shoe Leica that clarification.

Friday, 16 December 2016
உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம்
தஞ்சை: உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு டெல்டா விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை என கூறி கர்நாடக அரசு இடைக்கால முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்காததற்கும் காவிரி மீட்புகுழு கண்டனம் தெரிவித்துள்ளது.
English Summary:
Thanjavur: Supreme Court ordered the state of Karnataka in the kavery delta farmers have condemned the water quality to dissent. The rate of 2000 cubic feet per second of water to Tamil Nadu Karnataka Supreme Court opening. But saying that there is sufficient water in the kavery Karnataka government has filed an interim appeal.

Wednesday, 14 December 2016
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா மீண்டும் மனுதாக்கல்
புதுடில்லி : அணைகளில் தண்ணீர் இல்லாததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா தொடர்ந்து அடம் :
தமிழகத்திற்கு டிசம்பர் 15ம் தேதி வரை தினமும் 20,000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இந்த கால கெடு நாளை முடிவடைய உள்ள நிலையில், இன்று புதிய இடைக்கால மனு ஒன்றை கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், குடிநீர் தேவையை விட குறைவான அளவே கர்நாடக அணைகளில் நீர்இருப்பு உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு காவிரியில் தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary:
NEW DELHI: The lack of water in dams, the state Supreme Court would not be able to open up the water in the interim has been filed on behalf of the Government of Karnataka

பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ராஜினாமா
பெங்களூரு: பாலியல் புகாரில் சக்கிய கர்நாடக கலால் துறை அமைச்சர் மேட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாலியல் தொந்தரவு:
கர்நாடக கலால் துறை அமைச்சராக இருப்பவர் எச் ஓய் மேட்டி. இவர், தன்னிடம் வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இந்த சம்பவம் வெளியாகி மாநிலம் முழுவதிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய சிடியை, பாதிக்கப்பட்ட பெண், விஜயபுராவை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜசேகர் என்பவரிடம் கொடுத்தார். இது குறித்து அறிந்த அமைச்சர் தரப்பு, ராஜசேகருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சிடியை வெளியிடக்கூடாது என மிரட்டல் விடுத்தனர். இதனால், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
ராஜினாமா:
இந்நிலையில், இன்று, அந்த பெண்ணுக்கு அமைச்சர் பாலியல் தொந்தரவு செய்த சிடி வெளியிடப்பட்டது. இந்த சிடி மீடியாக்கள் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த முதல்வர், மேட்டியை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து அமைச்சர் மேட்டி, பெங்களூருவில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் வழங்கினார்
English summary:
Bangalore: Karnataka Excise Minister cakkiya on sexual harassment has resigned Matt.

Thursday, 8 December 2016
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு… கர்நாடகத்தில் உள்ள 21,280 கிராம் தங்கம் என்னவாகும்?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் 21 ஆயிரத்து 280 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கர்நாடக கருவூலத்தில் உள்ளது.
ஜெயலலிதாவின் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, அது தொடர்பான அவரது தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதா கொடுத்துள்ள உறுதிமொழி பத்திரத்தின் படி, 21 ஆயிரத்து 280 கிராம் தங்கம் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சொத்துக் குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.
இதுதவிர, ஜெயலலிதா கொடுத்துள்ள உறுதிமொழி பத்திரத்தின் படி, 1,250 கிராம் வெள்ளி பொருட்களும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு, 3 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டது. இந்த வெள்ளிப் பொருட்களும் கர்நாடக கருவூலத்தில் உள்ளன.
கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது மேல் முறையீடு செய்யப்பட்டு, கர்நாடக ஐகோர்ட் ஜெயலலிதாவை விடுதலை செய்தது.
என்றாலும், ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொருத்தே 21 ஆயிரத்து 280 கிராம் தங்கமும், 3 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளியும் தமிழ்நாட்டின் கருவூலத்திற்கு வந்து சேரும்.
இது தவிர, உறுதிமொழி பத்திரத்தில் உள்ளபடி ஜெயலலிதாவின் சொத்து விவரம்:
• 113 கோடியே 73 லட்சத்து 38 ஆயிரத்து 586 ரூபாய் சொத்து மதிப்பு
• கடன் மதிப்பு 2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987 ரூபாய்
• கையில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. 41,000
• அம்பாசிடர் கார் மதிப்பு ரூ. 10,000
• மகிந்திரா ஜீப் மதிப்பு ரூ. 10,000
• மகிந்திரா போலேரோ மதிப்பு ரூ. 80,000
• டெம்போ டிராவலர் மதிப்பு ரூ. 80,000
• ஸ்வராஜ் மஸ்டா மேக்சி மதிப்பு ரூ. 10,000
• காண்டசா மதிப்பு ரூ. 5,000
• டெம்போ ட்ராக்ஸ் ரூ. 30,000
• டொயாட்டோ ப்ரடோஸ் ரூ. 20 லட்சம்

All of Jayalalithaa's gold 21,280.300 gram lies in Karnataka.
Wednesday, 23 November 2016
சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களால்... அபாயம் : அமைச்சர் பரமேஸ்வருடன் பா.ஜ., விவாதம்
பெலகாவி: கர்நாடகாவில், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களால், ஆபத்து ஏற்படும்' என, சட்டசபையில், பா.ஜ., குற்றம் சாட்டியது. இப்பிரச்னை தொடர்பாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வருடன் காரசார விவாதம் நடந்தது.
சட்டசபை கேள்வி நேரத்தில் நேற்று, பா.ஜ., உறுப்பினர் சுனில் குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது: மாநிலத்தில், சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டுபிடிக்க, மாவட்ட அளவில் சிறப்பு செயல்படை அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தலைமை செயலர், போலீஸ் டி.ஜி.பி., ஆகியோர், அதிரடி படைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பர்.உள்ளூர் போலீசார், சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வருகின்றனர். மாநிலத்தில், 748 வங்க தேசத்தினர் வசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதில், 283 பேர் சட்ட விரோதமாக வசிப்பதாக தெரிகிறது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, 52 பேரை வெளியேற்றியுள்ளோம்.சட்ட விரோதமாக வசித்து வருவது தொடர்பாக, 25 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்று வசிப்பவர்களின் பிரச்னை மிகப்பெரியது. இவர்களால், பாதுகாப்புக்கு அபாயம் ஏற்படும் சாத்தியமுள்ளது. எனவே, அரசு இதை தீவிரமாக கருதுகிறது.வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழைபவர்களை தடுத்து நிறுத்துவது, கர்நாடக அரசின் எல்லைக்குள் வராது. இவ்விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜ., சுனில் குமார்: வங்கதேசத்திலிருந்து, கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை தரப்பட்டுள்ளது. இவை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். வெவ்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், சட்ட விரோதமாக வசித்து வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து, வெளியேற்ற வேண்டும்.
பா.ஜ., போப்பையா: மாநிலத்தில், ஐந்து லட்சம் பேர், சட்ட விரோதமாக வசித்து வருகின்றனர் என, தகவல் கிடைத்துள்ளது. குடகு மாவட்டத்தில் மட்டுமே ஒரு லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்கள், காபி தோட்டங்களில் பணியாற்றுகின்றனர். இவர்களால் எதிர்காலத்தில் பெரிய பிரச்னை ஏற்படும்.ம.ஜ.த., நிங்கய்யா: ஷிவமொகாவிலும் அதிக எண்ணிக்கையில், இதுபோன்று சட்ட விரோதமாக வசிப்பவர்கள் உள்ளனர். இது தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்த வேண்டும்.
பா.ஜ., ஜீவராஜ்: மாநிலத்தில் சட்ட விரோதமாக வசிப்பவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர்: கர்நாடகாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்க தேசத்தினரை வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தான்சானியா, நைஜிரியா உட்பட ஆப்ரிக்காவின் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், விசா காலம் முடிந்தும், பெங்களூரில் சட்ட விரோதமாக வசிக்கின்றனர். அவர்களில் 1,500 பேரை அடையாளம் கண்டு, வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.பா.ஜ., ராமசந்திர கவுடா: போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர்: பெங்களூரு நகர், போதை பொருள் விற்பனை மையமாக மாறி வருவது ஆதங்கத்துக்குரிய விஷயமாகும். போதை பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்த அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்.வேறு மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் போதை பொருட்கள் விற்பனை குறைவு. ஆனாலும், இதன் பின்விளைவுகள் அதிகம் என்பதால், இவற்றை கட்டுப்படுத்த, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.இவ்வாறு, விவாதம்
நடந்தது.
English Summary:
In Karnataka, illegal residents, the risk that, in the assembly, BJP accused. In connection with the issue, Home Minister paramesvar happened with the partisan debate