
நாடு முழுவது்ம் கடந்த 8ம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி, தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்கான கால அவகாசம் கடந்த 24ம் தேதியுடன் முடிந்ததால் தற்போது செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வரை இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏடிஎம்களை நோக்கி வியாபாரிகள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் படையெடுக்கின்றனர். ஆனால் பெரும்பாலான இடங்களில் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதால் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியை ஓட்டிய கோவில்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன. இதில் 45 ஏடிஎம்கள் மூடி கிடக்கின்றன. இந்த மையங்களில் பணம் நிரப்பப்பட்டதும் ஒரு சில மணி நேரத்தில் பணம் தீர்ந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்க கூட பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்ப வலியுறுத்தி கோவில்பட்டியில் மூடி கிடந்த ஏடிஎம் மையத்திற்கு 6 பேர் திடீரென இறுதி சடங்கு நடந்த முயன்றனர். இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
புதிய ரூ.500 நோடடுகள் நாளை வினியோகம் - அதிகாரிகள் தகவல்
இதற்கிடையே, நெல்லை மாவட்ட வங்கிகளில் நாளை முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகி்ன்றனர். புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த நிலையில் 500 ரூபாய் நோடடுகள் புழக்கத்திற்கு வரவில்லை. இதனால் வங்கி ஏடிஎம்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தும் அதற்கு சி்ல்லறை கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் பொருட்கள் வாங்க முடியவில்லை.
பெரும்பாலான ஏடிஎம்கள் இயங்காத நிலையில் திறந்திருக்கும் ஏடிஎம்மில் 2000 ரூபாயை தவிர வேறு நோட்டுகள் வரவில்லை. டெபிட், கிரெடிட் கார்டுகளை எல்லா நிறுவனங்களும் ஏற்கவில்லை. இதை கையாள பல நிறுவனங்களிடம் மிஷின்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. பணத் தட்டுப்பாட்டை போக்க ரூ.1500 கோடிக்கான புதிய 500 ரூபாய் நோட்டுகள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் இரு தினங்களில் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது, இன்று குறிப்பிட்ட அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் நெல்லை வரும் என எதிர்பார்க்கிறோம். நாளை முதல் வங்கிகளில் அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். தொடர்ந்து 500 நோட்டுகள் கூடுதலாக வரும் பட்சத்தில் அடுத்த வாரத்தில் நிலைமை மேலு்ம் சீரடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.
English summary:
6 persons have been arrested for attempting to stage funerals for ATM machines in Kovilpatti near Tuticorin.