
எல்லையில் ஊடுருவல்:
வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கானோர், இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். இந்தியா - வங்கதேச எல்லையின் பல பகுதிகளில் குறுக்கிடும் நதிகள், ஊடுருவலை தடுப்பதில் முட்டுக்கட்டையாக உள்ளன. அப்பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படாததால், ஊடுருவலை தடுப்பது சிரமமாக உள்ளது.
லேசர் சுவர்:
இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை உயரதிகாரி ஒருவர், கோல்கட்டாவில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:வங்கதேச எல்லையில் நதிகள் பாயும் பகுதிகளிலும், கடினமான நிலப் பரப்புகளிலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, இப்பகுதிகளில் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுவர் அமைக்கவும், சென்சார் கருவிகளை பொருத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அவசர நடவடிக்கையாக, இப்பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும்.
சில மாதங்களில்..
அடுத்தாண்டு முதல், லேசர் சுவர்கள் உதவியுடன் பாதுகாப்பு மேற்காள்ளப்படும். சோதனை முயற்சியாக, மேற்கு வங்கத்தில் வங்கதேச எல்லையை ஒட்டிய பகுதியில், அடுத்த சில மாதங்களில் லேசர் தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதற்கான பகுதி, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்பணியில், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Kolkata: India - Bangladesh border to prevent infiltration happening, 'laser' wall, sophisticated, sensor , is planned.