
அமைதியாக...
இது தொடர்பாக சேவக் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அமைதியாக போராட்டம் நடப்பதை பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. இந்த போராட்டம் அமைதியாக தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கேறேன். அமைதியாக நடக்கும் போராட்டம் அனைவருக்கும் பாடமாக அமையும் எனக்கூறியுள்ளார்.
உரிமை:
மற்றொரு வீரர் முகமது கைப் கூறுகையில், தங்களுக்கு விருப்பமானதற்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. போராட்டம் அமைதியாக நடக்க வேண்டிக்கொள்கிறேன் எனக்கூறியுள்ளார். முன்னதாக அவர் வெளியிட்ட மற்றொரு டுவிட்டில், ஜல்லிக்கட்டு கலாசாரம் தொடர்பானது என நண்பர்கள் கூறியுள்ளதை அறிந்துள்ளேன். இதனால் அதற்கு ஆதரவு அளிக்கிறேன். தமிழகத்தின் உணர்வை மதிப்பதாக கூறியிருந்தார்.
தமிழர் வீரம்:
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜூ கூறியதாவது: தமிழக மக்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் எனக்கூறியுள்ளார். மற்றொரு செய்தியில், தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என தமிழில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும்,கடந்த 1963 - 65ல் அலகாபாத் பல்கலையில் பி.ஏ., படித்த போது தமிழ் படித்துள்ளேன். அப்போது, தமிழர் வீரம் பற்றி முதலில் படித்தேன். தமிழக மக்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் எனக்கூறியுள்ளார்.
English Summary:
Chennai: Jallikattu in support of the students, volunteers, have been demonstrating. Support the struggle is intensifying. In this case, the struggle cricketers Virender Sehwag and Mohammad Kaif supported.