
சில தனியா் வங்கிகளில் மாதம் நான்கு முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என அறித்துள்ளன.
இது குறித்த விபரம்:
எச்.டி.எப்.சி., வங்கி : மாதம் 4 முறை இலவசமாக பணத்தை எடுத்து கொள்ளலாம் எனவும், அதன் பின் எடுக்கப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 150 கட்டணமாக வசூலிக்கப்படும், பணம் செலுத்த எந்த வித கட்டணமும் கிடையாது என அறிவித்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி: மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தாலும், செலுத்தினாலும் நவ.,8 ம் தேதிக்கு முன்பு நடைமுறையில் இருந்த கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆக்ஸிஸ் வங்கி: மாதம் 5 முறைக்கு மேல் அல்லது ரூ 10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பணத்தை செலுத்தினாலும், எடுத்தாலும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் ரூ 5 கணக்கிட்டு வரும் தொகை அல்லது ரூ 150 எது அதிகமாக இருக்கிறதோ அந்த தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்
இந்த நடைமுறை நேற்று (மார்ச் 1) முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
English summary:
New Delhi, 4 times more than in the private banks would charge Rs 150 would be charged to the banks for money transaction