
நாகை மாவட்டம் நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றும் இந்த ஆய்வு நடைபெற்றது. அகஸ்தியன் பள்ளி, வாய்மேடு, புத்தூர், திருவாய்மூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது. அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, வறட்சி கண்காணிப்பு அதிகாரி சந்திரமோகன் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். சாகுபடி பகுதிகளில் வாடிய நிலையில் இருக்கும் பயிர்களை பார்வையிட்ட அவர்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய், திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனத்துறை முதன்மைச் செயலர் மங்கத்ராம் ஷர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், பழனி வட்டத்திற்கு உட்பட்ட மானூர், கோரிக்கடவு, கல்வார்பட்டி போன்ற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பயிர்ச்சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் தருமபுரி மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் அமைச்சர் கே.பி. அன்பழகன், மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அரசின் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். போதிய நீரின்றி பாதிக்கப்பட்டிருக்கும் பயிர்களை பார்வையிட்ட அவர்கள், அதுகுறித்த விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
English summary:
Chennai, Jan. 07- The drought conditions in various parts of Tamil Nadu and agricultural impacts, information about the survey work has continued. Ministers held yesterday in this study, including the districts of Nagapattinam, including authorities requesting details of participating farmers.