
என்ன தவறு உள்ளது:
சென்னையில், இன்று(மார்ச் 2) நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, நேரில் சென்று பார்த்ததாக அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் எப்படி கூறலாம் என, ஓ.பி.எஸ்., அணியினர் கேட்கின்றனர். இதில் என்ன தவறு உள்ளது. அமைச்சர்களுக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது. ஜெ., மரணத்தில் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார். தண்டனை பெற்றவர்கள் ஒரு கட்சியின் தலைவராகவோ, பொதுச்செயலாளராகவோ இருக்க கூடாது என சட்டம் ஏதும் இல்லை. பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவராக லாலு உள்ளார். அவர் தண்டனை பெற்றவர் தான். அது போலதான் அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக சசிகலா நீடிக்கிறார். அவரது நியமனம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு உட்கட்சி விவகாரம். இதில் தலையிட நீதிமன்றத்திற்கோ, தேர்தல் ஆணையத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை. இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.