
தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு தடையை மத்தியமாநில அரசுகள் நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று மாநில எல்லையோர கிராமப்புற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட காளை மாட்டு வண்டிகளுடன் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொழிஞ்சாம்பாறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகளின் திடீர் போராட்டத்தால் கொழிஞ்சாம்பாறையிலிருந்து பொள்ளாச்சி, கோவை செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் காத்து நின்றன. கேரளாவில் தண்ணீரில் ரேக்ளா நடைபெறுவதற்கும், ரேக்ளா ரேஸ் நடைபெறுவதற்கும் மத்தியமாநில அரசுகள் அனுமதி வழங்கவேண்டும் என போராட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் பாரம்பரிய கலைப்போட்டிகளான காளை மாடுகளை மஞ்சு விரட்டுதல், ரேக்ளா ரேஸ் மற்றும் தண்ணீரில் ரேக்ளா போன்றவற்றிற்கு ஒருபோதும் மத்தியமாநில அரசுகள் தடை விதிக்கக்கூடாது.ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கவேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
English Summary:
Palakkad: Kerala-Tamil Nadu border kolinchamparai jallikattu to support public protest yesterday.