
சென்னை நுங்கம்பாக்கத்தில், தெற்காசியாவில் நடத்தப்படும் 'ஏ.டி.பி., வேர்ல்டு டூர்' அந்தஸ்து பெற்ற ஒரே தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் பவுடிஸ்டா, ரஷ்யாவின் மெட்வடேவை சந்தித்தார் . முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய பவுடிஸ்டா, அடுத்த செட்டையும் 6-4 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம் 13 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் பவுடிஸ்டா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் கோப்பை கைப்பற்றினார்.
English summary:
Chennai: The Chennai Open tennis championships in singles and won for the first time in Spain's Roberto pavutista. Medvedev and defeated Russia in the final of the Dane.