
கடந்த பிப்ரவரி மாதம் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் டாக்காவுக்கு சென்றிருந்தார். அப்போது வங்கதேச வெளியுறவு செயலாளர் பிரதமர் ஹசினாவின் பத்திரிகை உதவி தொடர்பாளர் நஸ்ரூல் இஸ்லாம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு பிரதமர் ஹசினா செல்வார் என்றார். கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு வங்கதேச பிரதமர் ஹசினாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு ஹசினா வரவிருந்தார். ஆனால் இந்தியாவில் உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பிரதமர் மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களுக்கு பணி அதிகமாக இருந்ததால் ஹசினா தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்தார்.