
ஐடி ரெய்டு :

இதனையடுத்து சேகர் ரெட்டி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் சேகர் ரெட்டியுடன், ராம் மோகன் ராவிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இன்று காலை 5.15 மணி முதல், ராம் மோகன் ராவின் அண்ணாநகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ராம் மோகன் ராவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது.
உறவினர் வீடுகளிலும் ரெய்டு :
ராம் மோகன் ராவ் உறவினர் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. ராம் மோகன் ராவிற்கு நெருக்கமான 7 தொழிலதிபர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. ஆந்திராவின் சித்தூரில் உள்ள ராம் மோகன் ராவின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
English Summary:
Chennai: Tamil Nadu Chief Secretary Ram Mohan Roy's house, income tax authorities have been conducting a raid.