சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் குளறுபடி உள்ளதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முரண்பாடு:
கொளத்தூர் தொகுதியில் ஆய்வு செய்த ஸ்டாலின் அளித்த பேட்டி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை வேதனை அளிப்பதுடன், வேடிக்கை அளிப்பதாகவும் உள்ளது. கடந்த செப்.,25ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின் ஒரிரு நாளில் வீடு திரும்புவார் என சொல்லப்பட்டது. ஆனால், நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா போயஸ் தோட்ட வீட்டிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போதே மயங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டார் என சொல்லப்பட்டுள்ளது. இதனால், அறிக்கையில் குளறுபடி உள்ளது, வேறுபாடு,முரண்பாடு உள்ளது.
மாறி மாறி...:
நாளை ஓ.பி.எஸ்., உண்ணாவிரதம் உள்ள நிலையில் அறிக்கை வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ்.,சிடம் தான் விசாரணை நடத்த வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஓ.பி.எஸ்., கூறுகிறார். இது 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் உள்ளது.
நீதிவிசாரணை நடத்த வேண்டும் :
அதிமுக பொது செயலர் ஜெயலலிதா மறைந்திருந்தால், அரசியல் நாகரீகம் கருதி எந்த பிரச்னையையும் கிளப்ப விரும்பவில்லை. ஆனால், முதல்வர் மரணத்தில் மர்மம் உள்ளதாக வெளியில் பேச்சு உள்ளது. எனவே ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தினால் ஓ.பி.எஸ்., சொல்வது உண்மையா, விஜயபாஸ்கர் சொல்வது உண்மையா, அப்பல்லோ வெளியிட்ட அறிக்கை உண்மையா, எய்ம்ஸ் அறிக்கை உண்மையா அல்லது வெளியில் பேசுவது உண்மையா என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai: In a statement released by her death AIIMS is messy DMK leader MK Stalin said act.