
விஐபி வசிக்கும் இடங்களில் மட்டும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், சாதாரண மக்கள் வசிக்கும் பகுதியில் மரங்களை அப்புறப்படுத்துவதில் மாநகராட்சி தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. குறிப்பாக, மரங்கள் வெட்டி சாலையின் இருபுறங்களிலும் குவியல் குவியலாக போடப்பட்டுள்ளது. அந்த மரங்கள், 3 நாட்களாக அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால், சாலையோரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மரக்கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிக்கு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நிலைமை சீராக இன்னும் 2 வாரங்கள் ஆகலாம் என மக்கள் வேதனை தெரிவித்தனர்.
4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் தண்ணீர் கூட எடுக்க முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மிக்சி, கிரைண்டர் இயக்க முடியாததால் மக்கள் தற்போது கற்காலத்திற்கே திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் குடிதண்ணீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் பிளாஸ்டிக் குடத்துடன் கிணறுகளை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பதே அனைவரின் ஒரே கேள்வியாக உள்ளது. செல்போனும் பயன்படுத்த முடியவில்லை. இதனால், கடந்த 4 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
English Summary:
Chennai: `varta '4 days after the storm struck the city of Chennai, in the sides of the road cleared of trees and branches to provide easy display of heaps