
சென்னை நுங்கம்பாக்கத்தில், தெற்காசியாவில் நடத்தப்படும் 'ஏ.டி.பி., வேர்ல்டு டூர்' அந்தஸ்து பெற்ற ஒரே தொடரான 22வது சென்னை ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, சகநாட்டை சேர்ந்த புரவ் ராஜா, திவிஜ் சரண் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய போபண்ணா ஜோடி, இரண்டாவது செட்டை 6-4 என வென்றது. ஒரு மணி நேரம், ஐந்து நிமிடம் வரை நீடித்த பைனலின் முடிவில், போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
English summary:
Chennai: Chennai Open tennis doubles, India's Rohan Bopanna and Jeevan nedujaliyan pair won the championship.