சென்னை: ஜல்லிக்கட்டை வலியுறுத்தி சென்னை மெரினாவில் தொடர் போராட்டம் நடத்திய தமிழக மாணவர்களும், இளைஞர்களும் அவசர சட்டம் இயற்றிய பின்பும் கலைந்து செல்லாததால், அவர்களை விரட்டி அடித்தது, தமிழக போலீஸ். அப்போது, சென்னையின் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அதிருப்தி:
இந்த பிரச்னையில், தமிழக போலீஸ் நடவடிக்கைகளை ஒரு தரப்பினரும்; மாணவர்களின் செயல்பாடுகளை ஒரு தரப்பினரும் எதிர்க்கின்றனர். மாணவர்களை ஆதரித்தும்; போலீசுக்கு எதிராகவும் கருத்து சொல்லி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். நடந்த சம்பவங்களுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பது வரையில், அவரது கோரிக்கை அமைந்துள்ளது. இந்த பிரச்னையில், முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளை கடுமையாகவும் விமர்சித்துள்ளார், நடிகர் கமல்ஹாசன். இது பன்னீர்செல்வம் தரப்பினரை கடும் அதிருப்திக்கு ஆளாக்கி இருக்கிறது. இதையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பாக கடும் விமர்சனங்களை வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், இதற்காக, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை அழைத்து பேசி இருக்கிறார்.
இது குறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: நடிகர் சரத்குமாரைப் பொறுத்த வரையில், அவர், நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பான மன நிலையில் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, தமிழக அரசியலில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்தார். உடனே, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை மற்றும் பேட்டி கொடுத்த சரத்குமார்,‛ நடிகர் ரஜினி, அரசியலுக்கு வரக் கூடாது; வந்தால், அவரை நான் கடுமையாக எதிர்ப்பேன்; அவரை எதிர்ப்பதையே முழு நேரத் தொழிலாக்கிக் கொள்வேன்' என்றெல்லாம், ரஜினிக்கு எதிராக கொந்தளித்தார்.
சீண்டுகிறார்:
இந்நிலையில், ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், கலைந்து செல்லாத அவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். அதை வைத்து, தற்போது, தமிழக போலீசையும், முதல்வர் பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழகம் தொடர்பான எந்த பிரச்னையிலும் ஆர்வம் காட்டாத நடிகர் கமல்ஹாசன், முதல்வராக ஜெயலலிதா இருந்த கால கட்டங்களில், தன் விசுவரூபம் படம் வெளியாக முடியாமல் புலம்பிய புலம்பலை மறந்துவிட்டு, தேவையில்லாமல், பன்னீர்செல்வத்தை சீண்டுகிறார்.
அதற்குக் காரணம், விசுவரூபம் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டபோது, தமிழக அரசை அவர் கடுமையாக விமர்சிக்க, அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, கமல்ஹாசனின் செயல்பாடுகளை விமர்சித்து, கடுமையான அறிக்கையை வெளியிட, தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொண்டார்.
தலைமை விருப்பம்:
ஆனால், அப்போது வெளியான அந்த அறிக்கை பன்னீர்செல்வம் தயாரித்தது அல்ல. அந்த அறிக்கையின் சாராம்சத்தில், பன்னீருக்கும் உடன்பாடும் இல்லாமல்தான் இருந்தது.ஆனால், கட்சித் தலைமையின் விருப்பத்தை மட்டுமே, பன்னீர்செல்வம் நிறைவேற்றினார். இதை பர்சனலாக எடுத்துக் கொண்ட கமல்ஹாசன், தற்போது முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பன்னீர்செல்வத்துக்கு எதிராக மாணவர்கள் பிரச்னையை கையில் எடுத்து, கடும் விமர்சனங்களை வைக்கிறார். தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த முயல்கிறார்.
இது, பன்னீர்செல்வத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனால், நடிகர் சங்கப் பிரச்னையில், சரத்குமாருக்கு எதிரான மனநிலையில் இருந்து செயல்பட்ட கமல்ஹாசனை எதிர்க்க, சரத்குமார்தான் சரியான நபர் என தேர்ந்தெடுத்து, அவரை அழைத்து பேசியுள்ளார் பன்னீர்செல்வம். முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து திரும்பி உள்ள சரத்குமார், பன்னீரின் செயல்பாடுகளை பாராட்டி மகிழ்ந்துள்ளார். விரைவில், கமல்ஹாசனுக்கு எதிராக கச்சை கட்டுவார். அதற்கான, எல்லா விபரங்களும் பேசி முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
English summary:
Chennai: Tamil Nadu protested a series of gravel Marina urging students and young people dispersed after the ordinance passed by the invalid, driving them to the Tamil Nadu police. Then, there were riots in many places in Chennai, also suffering from severe public.